Site icon Tech Tamilan

நீர் இல்லாவிடில் பூமியில் உயிரினம் தோன்றியிருக்குமா? பூமி பற்றிய பல்வேறு கேள்விக்கான பதில்கள்

பூமி பற்றிய பல்வேறு கேள்விக்கான பதில்கள்

டைனோசர்கள் அழிய இதுவே காரணம் | 60 டிகிரி கோணத்தில் மோதிய சிறுகோள்

Basic Information About Earth

பூமி எப்படி தனித்துவம் பெறுகிறது?

பூமி எப்படி உருவானது?


பூமியில் உயிரினம் ஏன் தோன்றின?


பூமி பற்றிய சில தகவல்கள்?


நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கிறது?


நீர் இல்லாவிடில் பூமியில் உயிரினம் தோன்றியிருக்குமா?


பூமி தவிர வேறெங்கும் உயிரினம் வாழ்கின்றனவா?


கோடான கோடி நட்சத்திரங்கள் சுழன்றுகொண்டிருக்கும் இந்தப்பேரண்டத்தில் பூமியைத் தவிர வேறெங்கும் உயிர்கள் வாழ்வதாகத் தெரியவில்லை. பேரண்டத்தில் பூமியில் மட்டும் உயிர்கள் தோன்றியது எப்படி என்பது ஆச்சர்யமான கேள்வி. பூமி எப்படி பிற கோள்களில் இருந்து வேறுபடுகிறது? வாருங்கள் பார்க்கலாம்.

நாம் இங்கே பார்க்க இருக்கும் கேள்விகள்,

பூமி எப்படி தனித்துவம் பெறுகிறது?

பூமி எப்படி உருவானது?

பூமியில் உயிரினம் ஏன் தோன்றின?

பூமி பற்றிய சில தகவல்கள்?

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கிறது?

நீர் இல்லாவிடில் பூமியில் உயிரினம் தோன்றியிருக்குமா?

பூமி தவிர வேறெங்கும் உயிரினம் வாழ்கின்றனவா?

பூமி எப்படி தனித்துவம் பெறுகிறது?

இயற்கை மிகவும் அற்புதமானது. அந்த வகையில் நாம் அறிந்ததிலேயே பூமியில் மட்டும் தான் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. நாமறிந்த வகையில் வேறெங்கும் உயிரினங்கள் இல்லை. இதனாலேயே தான் பூமி மற்ற கோள்களில் இருந்து தனித்துவம் பெறுகிறது. நம் சூரிய குடும்பத்தில் இருக்கும் பிற கோள்களில் கூட இப்படி ஒரு அற்புதம் நடக்கவில்லை. பூமிக்கு மட்டும் இப்படியொரு வாய்ப்பு எப்படி கிடைத்தது? பூமியில் இருக்கும் நீர் மற்றும் ஆக்சிஜன் தான் இங்கே உயிரினங்கள் தோன்றுவதற்கான காரணமாக அமைந்தன. நீரிலும் நிலத்திலும் எண்ணமுடியாத எண்ணிக்கையில் இங்கே ஜீவராசிகள் இருக்கின்றன. நாம் அறிந்தது போல பூமி மூன்றில் இரண்டு மடங்கு தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. ஆகவே தான் விண்வெளியில் இருந்து பார்க்கும் போது நீல நிறத்தில் காட்சியளிக்கிறது.

பூமி எப்படி உருவானது?

சூரியன் உட்பட அனைத்து கோள்களுமே 4.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளி தூசுகளால் உருவானவையே. அந்த சூழலில் நாம் இப்போது காணுவது போல விண்வெளி அமைதியாக இருக்கவில்லை. எண்ணற்ற மோதல்கள் அடிக்கடி நடந்து வந்தன. பூமியும் கூட இதுபோன்ற பல மோதல்களை சந்தித்துள்ளது. அந்த சூழ்நிலையில் பூமியின் உட்கரு பல்வேறு உலோகங்கள் உருக ஆரம்பித்தன. இதனால் அடிக்கடி எரிமலை வெடிப்புகளும் நடந்தன. அதே சமயம் பூமியின் வெப்பநிலை படிப்படியாக குறையவும் ஆரம்பித்தது. சுமார் 3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக 100 டிகிரி அளவுக்கு வெப்பநிலை குறைந்தது. இதனால் பூமி திட நிலையை அடைய ஆரம்பித்தது. அப்போது பூமியை சுற்றிலும் நீராவியால் [water vapour] சூழப்பட்டு இருந்தது.

பூமியில் உயிரினம் ஏன் தோன்றின?

ஏதோ சில ஆண்டுகளில் பூமியில் உயிரினங்கள் தோன்றிவிடவில்லை. படிப்படியாக பல்வேறு மில்லியன் கணக்கான ஆண்டுகள் அதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. பூமியில் இருந்த பொருள்களும் சூரியனுக்கும் பூமிக்கும் இருக்கின்ற மிகச்சரியான இடைவெளியும் தான் பூமியில் உயிரினங்கள் தோன்றிட வழி ஏற்படுத்திக்கொடுத்தன. சூரியனில் இருந்து கிடைக்கப்பெறும் சரியான வெப்பத்தினால் நீர் ஆவியாகி விடாமலும் அதிகமாக குளிர்ந்து ஐஸ்கட்டியாக மாறிவிடாமலும் இருக்கச்செய்கிறது. சூரியனில் இருந்து வெளிப்படும் UV கதிர்கள், இடியால் தோன்றும் மின்னல்கள், எண்ணற்ற எரிமலை வெடிப்புகள் இவை அனைத்தும் பல்வேறு விதமான வேதிப்பொருள்கள் உருவாக காரணமாக அமைந்தன. 4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னதாக முதல் முதல் மூலக்கூறு உருவானதாகவும் அதிலிருந்து ஒற்றை உயிரணுக்கள் [unicellular organisms] உருவானதாகவும் சொல்லப்படுகிறது.

பூமி பற்றிய சில தகவல்கள்?

சூரியனில் இருந்து பூமியின் தூரம் : ஏறத்தாழ 150 மில்லியன் கிலோமீட்டர்

பூமியின் ஆரம் [radius] 6378 கிலோமீட்டர்

சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் 365.26 நாட்கள்

பூமிக்கு 1 நிலவு மட்டுமே உண்டு

பூமியின் எடை 6 ட்ரில்லியன் டன்

நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் எங்கிருந்து கிடைக்கிறது?

பூமியில் உயிரினங்கள் வாழ முதன்மையான அவசியம் ஆக்சிஜன். பூமியில் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆக்சிஜன் உருவானதாக நம்பப்படுகிறது. சூரியனில் இருந்து வெளிப்படும் UV கதிர்வீச்சு நீராவியை சிதைத்து ஆக்சிஜன் மற்றும் மற்றும் ஹைட்ரஜன் ஆக வளிமண்டலத்தில் வெளியிட்டது. இந்த ஆக்சிஜன் மற்ற மூலப்பொருள்களோடு உடனே வேதி வினையில் ஈடுபட்டதால் வளிமண்டலத்தில் இல்லை. தற்போது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் முழுவதும் தாவரங்கள், மரங்கள் மேற்கொள்ளும் போட்டோசிந்தஸிஸ் நிகழ்வால் மட்டுமே கிடைக்கிறது. கடல் நீர் மூலமாகவும் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெறுகிறது. கடலில் இருக்கும் ஒருவகை பாக்டீரியாக்கள் சூரிய ஒளி மற்றும் கார்பன் டை ஆக்ஸைடு இவற்றை கிரகித்து ஆக்சிஜனை வெளியிடுகிறது [Photosynthesis]. இந்த நிகழ்வுகளால் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வளிமண்டலத்தில் 4% அளவுக்கு ஆக்சிஜன் உருவானது.

போட்டோசிந்தஸிஸ் என்பது தாவரங்கள் ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் ஆகியவற்றை உற்பத்தி செய்கிற முறை. தாவரங்கள் வேர் மூலமாக நீரை இலைகளுக்கு அனுப்புகின்றன. இலைகள் கார்பன் டை ஆக்ஸைடை வெளிப்புறத்தில் இருந்து உறிஞ்சுகின்றன. சூரிய ஒளியினை பயன்படுத்தி நடைபெறும் வினையில் கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகிய மூலக்கூறுகளை வெளியிடுகின்றன. தாவரங்கள் தங்களுக்கு தேவையான குளுகோஸை இதன் மூலமாக உற்பத்தி செய்துகொள்கின்றன.

நீர் இல்லாவிடில் பூமியில் உயிரினம் தோன்றியிருக்குமா?

நீரின்றி அமையாது உலகு என்பது பழமொழி மட்டுமே அல்ல, அது அறிவியலின் உண்மை. தண்ணீர் இல்லாவிடில் தாவரங்களால் ஆக்சிஜனை உற்பத்தி செய்திட முடியாது. இதனால் வளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் அளவு குறைந்துகொண்டே போகும். பூமி ஒருவித நிலைத்தன்மையுடன் இருப்பதற்கு காரணம் இங்கே இருக்கும் கடல்கள் தான். சூரிய வெப்பத்தினால் பூமியின் உட்பகுதி அதிக வெப்பமடையாமல் காப்பதற்கும் வளிமண்டலத்தை நிலைத்தன்மையுடன் வைத்திருப்பதற்கும் நீர் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

பூமி தவிர வேறெங்கும் உயிரினம் வாழ்கின்றனவா?

ஏலியன்ஸ் இருக்கிறார்கள் என சில சமயங்களில் செய்திகள் உலா வந்தாலும் கூட ஆதாரபூர்வமாக பூமி தவிர வேறெங்கும் உயிரினங்கள் வாழ்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. உயிரினம் தோன்றுவதற்கும் வாழ்வதற்கும் சுற்றுசூழல் முக்கிய பங்காக இருக்கிறது. நீர், சரியான வெப்பநிலை, இயற்கையின் ஒத்துழைப்பு என அனைத்தும் சரியாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே உயிரினங்கள் தோன்றும். பூமியைத்தவிர வேறெங்கும் உயிரினங்கள் வாழுகின்றனவா என்ற தேடுதல் தொடர்ச்சியாக நடந்துகொண்டே இருக்கிறது.



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version