Site icon Tech Tamilan

ஏலியன்ஸ் இருக்கிறார்கள் : இஸ்ரேலிய ஜெனரல் அதிரடி பேட்டி

மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி எதுவென்றால் "பேரண்டத்தில் பூமியைத் தவிர்த்து வேறெந்த இடத்திலாவது உயிரினங்கள் [ஏலியன்ஸ்] வாழ்கின்றனவா?" என்பதுதான். ஏலியன்ஸ் இருப்பது உண்மை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் க்கு அது தெரியும் எனவும் தெரிவித்துள்ளார் இஸ்ரேலிய விண்வெளி பாதுகாப்பு தலைவர்.

ஏலியன்ஸ்

Aliens Exist

மனிதர்களின் விண்வெளி ஆராய்ச்சியில் அதி முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி எதுவென்றால் “பேரண்டத்தில் பூமியைத் தவிர்த்து வேறெந்த இடத்திலாவது உயிரினங்கள் [ஏலியன்ஸ்] வாழ்கின்றனவா?” என்பதுதான். ஏலியன்ஸ் இருப்பது உண்மை எனவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் க்கு அது தெரியும் எனவும் தெரிவித்துள்ளார் இஸ்ரேலிய விண்வெளி பாதுகாப்பு தலைவர்.



அவ்வப்போது ஏலியன்ஸ் பற்றிய செய்திகளும் பறக்கும் தட்டுக்கள் பற்றிய செய்திகளும் நம்மிடையே வந்து போவதுண்டு. விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளின் அடிப்படை கேள்விகளில் ஒன்று “ஏலியன்ஸ்  இருக்கிறார்களா?” என்பதுதான். இதற்கு ‘ஏலியன்ஸ் இருப்பது உண்மை தான்’ ஆனால் திட்டமிட்டு இந்த செய்திகள் மறைக்கப்படுகின்றன என பலர் கூறுவதும் உண்டு. இதுநாள் வரைக்கும் நாசா விஞ்ஞானிகளே ஏலியன்ஸ் பற்றிய கேள்விகளுக்கு ‘பேரண்டத்தில் பூமியை தவிர வேறு கிரகங்களில் ஜீவராசிகள் வாழ்வதற்கான உறுதியான தகவல்கள் கிடைக்கவில்லை, நாங்கள் அதுபற்றி தேடிக்கொண்டு தான் இருக்கிறோம்’ என பதில் தருகிறார்கள். 

இந்த சூழ்நிலையில் தான் இஸ்ரேல் நாட்டின் விண்வெளி பாதுகாப்புத் திட்டத்திற்கு தலைமை தாங்கிய ஹைம் எஷெட் (Haim Eshed) என்பவர் இஸ்ரேல் நாட்டின் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘ஏலியன்ஸ் இருப்பது உண்மை தான். அவர்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நாட்டுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். இது தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு தெரியும். அவர் ஏலியன்ஸ் இருப்பதை மக்களிடம் சொல்ல விரும்பினார். ஆனால் ஏலியன்ஸ்  இப்போதைக்கு மக்களிடம் சொல்ல வேண்டாம் என கூறியிருக்கிறார்கள்” என அடுக்கடுக்கான பல தகவல்களைக் கூறி அதிரடி காட்டினார். 

ஏலியன்ஸ் இருப்பதை மக்களிடம் சொல்ல டிரம்ப் விரும்பியபோது ஏலியன்ஸ் அதனை ஏன் தடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு ‘ஏலியன்ஸ் இருப்பதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு மக்கள் தயார் நிலையில் இல்லை. அவர்கள் விண்வெளி பற்றியும் விண்வெளி கப்பல்கள் பற்றியும் புரிந்துகொள்ளக்கூடிய நிலைக்கு வந்தவுடன் ஏலியன்ஸ் இருப்பை உறுதிப்படுத்தலாம். இல்லையேல் மக்களிடம் குழப்பம் ஏற்படும், ஏலியன்ஸ் அமைதியையே விரும்புகிறார்கள்’ என பதில் அளித்தார். 

 

மேலும் தனது பேட்டியில்  “கேலடிக் கூட்டமைப்பு” (“Galactic Federation”) என்ற ஒன்று இருப்பதாகவும் தெரிவித்த அவர், நம்மைப்போலவே இந்த விண்வெளியை புரிந்துகொள்வதற்கு அவர்களும் விரும்புகிறார்கள் என தெரிவித்தார். அமெரிக்க அரசுக்கும் ஏலியன்ஸ் கூட்டமைப்புக்கும் இடையே ஒப்பந்தம் இருப்பதாகவும் அதன்படி, செய்வாய் கிரகத்தின் தரைக்கு கீழே அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி கூடத்தில் ஏலியன்ஸ் உடன் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களும் வேலை செய்துவருவதாக தெரிவித்தார். 

தற்போது இவர் அளித்துள்ள பேட்டி முக்கியத்துவம் பெறுவதற்கு முக்கியக்காரணம் இவர் 1981 முதல் 2010 வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புத் திட்டத்திற்கு தலைமை தாங்கியவர் என்பது தான். இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது அனைத்து தகவல்களையும் ஏன் கூறுகிறீர்கள் என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு ‘நான் 5 வருடங்களுக்கு முன்னர் இதனை தெரிவித்து இருந்தால் நான் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பேன். இப்போது அவர்களின் மனநிலை மாறியிருக்கிறது என்று கூறும் ஹைம்  பல பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டு இருக்கிறார். 

நம்முடைய சந்தேகம் என்னவென்றால், ஏலியன்ஸ் இருப்பது உண்மையென்றால் ஏன் இன்றளவும் கூட நாசா பல மில்லியன் டாலர்கள் செலவு செய்து ஏலியன்ஸ் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது? சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு இந்த ரகசியம் தெரியாமலா இருக்கும், பிறகு அவர்கள் ஏன் கடுமையாக செலவு செய்து ஏலியன்ஸ் இருப்பை கண்டறிய முனைப்பு காட்டுகிறார்கள்?. ஏலியன்ஸ் இருப்பது உண்மையாகக்கூட இருக்கலாம், வெளிப்படையாக தகவல்கள் வெளியாகும் வரை ஏலியன்ஸ் இருப்பது என்பது விடை தெரியாத மர்மமாகவே இருக்கும். 

அமெரிக்கா வெளியிட்ட ஏலியன்ஸ் பறக்கும் தட்டுகள் வீடியோ | என்ன சொல்கிறது அமெரிக்கா?

Click Here

ஏலியன்ஸ் இருப்பது உண்மைதானா? ஏலியன்ஸ்களை கண்டறிவதில் என்ன சிக்கல் இருக்கிறது?

Click Here



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version