World’s Fastest Train
உலகின் அதிவேக மற்றும் பாதுகாப்பான புல்லட் ரயில் ஜப்பானில் சோதனை செய்யப்பட இருக்கிறது
உலகின் அதிவேக புல்லெட் ரயில் Alfa – X [Advanced Labs for Frontline Activity in rail eXperimentation] ஜப்பானில் சோதனை செய்யப்பட இருக்கிறது. இந்த புல்லட் ரயிலானது மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய திறனுள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் இந்த ரயிலானது 2030 இல் சேவைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டத்தில் 360 KM/Hr வேகத்தில் பயணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த வேகமானது ஏற்கனவே சீனாவில் பயன்பாட்டில் இருக்கக்கூடிய China’s Fuxing Hao புல்லட் ரயிலை விடவும் 10 கிலோமீட்டர்/ மணி கூடுதலான வேகம் என்பது குறிப்பிடத்தக்கது.
10 பெட்டிகளை கொண்ட இந்த புல்லட் ரயிலின் முற்புறம் முதலையின் மூக்கு போன்ற வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் நீளம் 22 மீட்டர்கள். சில்வர் முலாம்களால் பூசப்பட்ட பெட்டிகளுக்குள் பயணிகள் பாதுகாப்பாக அதே சமயம் சொகுசாகவும் பயணிக்க முடியும். இந்த ரயில் சோதனையானது இந்த வெள்ளிக்கிழமை (மே 10) முதல் ஆமோரி (Aomori) மற்றும் செண்டாய் (Sendai) நகர்களுக்கு இடையே சோதனை செய்யப்பட்ட இருக்கிறது.
இந்த புல்லட் ரயிலில் ஏர் பிரேக்ஸ் (air brakes) ரயிலின் மேற்புறத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதுதவிர தண்டவாளத்திற்கு அருகில் இருக்கின்ற மேக்னட்டிக் பிளேட்ஸ் (Magnetic Plates) ரயிலின் வேகத்தை குறைக்க பயன்படும். இதில் இருக்கக்கூடிய டேம்பேர்ஸ் (dampers) மற்றும் ஏர் சஸ்பென்ஷன் (air suspension) வளைவுகளில் ரயில் திரும்பிடும்போது நிலைத்தன்மையையும் பயணிகளுக்கு பயணம் செய்திட ஏதுவான சூழலையும் கொடுக்க பயன்படும்
Sridaran
Baskaran
Blogger
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.