Site icon Tech Tamilan

வலிப்பு வருவதை 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே கண்டுபிடிக்கும் கருவி

வலிப்பு வருவதை 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே கண்டுபிடிக்கும் கருவி

வலிப்பு வருவதை 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே கண்டுபிடிக்கும் கருவி

வலிப்பு வருவதை 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே கண்டுபிடிக்கும் கருவி

AI Predicts Epilepsy

வலிப்பு வருவதை 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே கண்டறிந்து கூறும் கருவி கண்டறியப்பட்டு இருக்கிறது. விரைவில் வணிகத்திற்கு வரும் என கூறப்படுகிறது

Click Here! Get Updates On WhatsApp


சரியான உதவியினை பெறாவிட்டால் உயிர் இழப்பைக்கூட ஏற்படுத்திவிடும் ஆபத்தான நோய் தான் வலிப்பு. ஏற்கனவே இரவு நேரங்களில் வலிப்பு வருவதனை கண்டறிய கைகளில் கட்டிக்கொள்ளும் “Smart arm bracelet” ஐ விஞ்ஞானிகள் உருவாக்கினார்கள். இரவு நேரங்களில் வலிப்பு வரும்போது அதனை கண்டறிந்து அலெர்ட் செய்திடும் வகையில் இந்த கருவி வடிவமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இரண்டு ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புதிய கண்டுபிடிப்பை உருவாக்கி இருக்கிறார்கள். இதன் மூலமாக நோயாளியின் மூளையில் இருந்து பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே வலிப்பு  வரப்போகிறது என்பதனை கண்டறியும் விதமான கருவியை கண்டறிந்து இருக்கிறார்கள்.

லூசியானா பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகின்ற ஹிஷாம் டவுட் மற்றும் மேக்டி பயாமி [Hisham Daoud and Magdy Bayoumi] ஆகிய இருவரும் தான் புதிய கருவியை வடிவமைத்து இருக்கிறார்கள். தற்போதைய முறைப்படி, EEG எடுக்கப்பட்டு தரவுகள் பெறப்படும் பின்னர் அந்த தரவுகள் ஆராயப்பட்டு வலிப்பு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என கூறப்படும். ஆனால் தற்போதைய புதிய கருவியில் இரண்டும் ஒரே நேரத்தில் தொடர்ச்சியாக செய்யப்படும். ஏற்கனவே பெறப்பட்ட தரவுகளின் தகவல்களை ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பமானது ஆராய்ந்து [Machine Learning] வலிப்பு வர வாய்ப்பு இருக்கிறதா என 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே அலெர்ட் செய்துவிடும்.

 

இதனால் நோயாளிகள் முன்னதாகவே மருத்துவ வசதியை பெறலாம், மருத்துவரை அணுகலாம். தங்களை தயார்படுத்திக்கொள்ள இந்த கருவி நிச்சயமாக பயன்படும். வயதானவர்களுக்கோ குழந்தைகளுக்கோ இந்தக்கருவியை பயன்படுத்துவதன் மூலமாக ஆபத்தை தவிர்க்கலாம்.மனிதர்கள் அணிந்துகொள்ளும் வகையிலான கருவியாக வடிவமைத்தவுடன் விறபனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

எது எப்படியோ மனிதர்கள் உயிர்களை காப்பாற்றினால் சரிதான்.


Click Here! Get Updates On WhatsApp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version