TNPSC Current Affairs January 02 – 03


பிரதான் மந்திரி உஜ்ஜவாலா யோஜனா திட்டம்

> வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் குடும்பங்களுக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு அளித்திடும் திட்டம்.

> ஏழை பெண்கள் புகை போன்றவற்றில் பாதிக்கப்படக்கூடாது என்பதனை முதன்மையாக கொண்டு இந்த திட்டம் உருவாக்கப்பட்டது

> மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இந்த திட்டத்தினை கொண்டுவந்துள்ளது


ஆதார் சட்டத்தில் மாற்றம்

> சுப்ரீம் கோர்ட் தனியார் நிறுவனங்கள் ஆதார் தகவலை சேகரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த சூழலில் ஆதார் திருத்த மசோதா மக்களவையில் தாக்கலானது

> இதன்படி வங்கி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி ஆதார் தகவலை கேட்க கூடாது


Asia Reassurance Initiative Act

> அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த திட்டத்தில் கெய்யெழுத்திட்டுள்ளார்

> முக்கிய நோக்கம் ஆசியாவில் சீனாவிற்கு போட்டியாக தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்த தேவைப்படுகிற விசயங்களை செயல்படுத்துவது


பாலின் தரத்தை அறியும் பேப்பர் சென்சார்

> IIT, கௌகாத்தி யை சேர்ந்த விஞ்ஞானிகள் பாலின் தரத்தை அறியும் பேப்பர் சென்சார் ஒன்றினை வடிவமைத்துள்ளனர்.

> இதனை கொண்டு பால் எவ்வளவு புதிதானது என்பதனை எளிமையாக கண்டறிய இயலும்


இந்தியா – பாகிஸ்தான் நியூக்கிளியர் தகவல்கள் பகிர்வு

> நியூக்கிளியர் இருக்கும் இடங்களை இரு நாடுகளும் தாக்காமல் இருக்கும் பொருட்டு கடந்த 31,டிசம்பர் 1988 இல் ஒப்பந்தம் போடப்பட்டது

> அதன்படி இரு நாடுகளும் தகவலை பரிமாறிக்கொள்ளும்

> அந்த இடங்களை தாக்கவோ சேதப்படுத்திவிடவோ கூடாது என்பது தான் ஒப்பந்தத்தின் முக்கியம் நோக்கம்


National Legal Services Authority (NALSA) வின் சேர்மனாக நீதிபதி AK சிக்ரி நியமனம்,, குடியரசுத்தலைவர் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.


அலகாபாத் நகரத்திற்கு பிரயாக்ராஜ் எனும் பெயர் மாற்றத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது


வனிதா மதில்

> கேரளாவில் பாலின வேறுபாட்டை கலைந்திடும் பொருட்டு முற்றிலும் பெண்களால் ஆன பேரணி நடைபெற்றது

> 30 லட்சம் பெண்கள் பங்கேற்ற இந்த நிகழ்வு வனிதா மதில் என அழைக்கப்பட்டது


இந்திய அறிவியல் மாநாடு 2019

> ஜனவரி 03, 2019 அன்று பிரதமர் மோடியால் துவங்கிவைக்கப்பட்ட இது 106 வது மாநாடு ஆகும்

> பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் நடந்தது

> ஜலந்தர் லவ்லி ப்ரோபோசனல் பல்கலைக்கழகத்தில் மாநாடு நடைபெற்றது

> கருப்பொருள் : எதிர்கால இந்தியா – அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்


வங்கதேசத்தின் பிரதமராக மீண்டும் ஷேக் ஹசினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்


சாஸ்த்ரா 2019

> சென்னை IIT இந்த ஆண்டு தொழில்நுட்ப கண்காட்சியினை நடத்துகிறது

> ஜனவரி 03 முதல் ஜனவரி 06 வரை நடக்கும்


[easy-notify id=823]

INS விராட் போர்க்கப்பல்

கடந்த 2016 ஆம் ஆண்டு தன்னுடைய பணியினை முடித்துக்கொண்ட விராட் போர்க்கப்பல் அருங்காட்சியகமாக மாற்றப்பட இருக்கிறது.


Previous Current Affairs : Click here

Take Sample Test here : Click Here


TECH TAMILAN