காசநோய் இல்லாத தமிழகம்-2025
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த வடநெம்மேலியில் உலக சுகாதார நிறுவனம் சார்பில் ‘காசநோய் இல்லாத தமிழகம்-2025″ என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் தமிழகத்தில் காசநோய் முற்றிலும் ஒழிக்கப்படும் என்று கூறினார். 10 மாவட்டங்களில் காசநோயை கண்டுபிடிக்க நடமாடும் எக்ஸ்ரே திட்டம் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டம்
ஆயில் நிறுவனங்கள் CSR (கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி) இன் கீழ் சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டத்தை ஒரிசாவில் தொடங்கியுள்ளனர்.
ஒடிசாவில் இதற்கென சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் ஆலைகள் அமைக்கப்பட இருக்கின்றன
பெண்களுக்கு அதனை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது
DFI கமிட்டி
Doubling Farmers Income விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்குவதற்காக திட்டங்களை ஆராயும் குழு
2016 ஆம் ஆண்டு அசோக் டல்வாய் என்பவரின் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இதன் பணி 2022 இல் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்க்காக ஆலோசனைகளை வழங்குவது, திட்டங்களை கண்காணிப்பது.
Rajasthan Panchayati Raj Amendment Bill 2015 Cancelled
ராஜஸ்தான் மாநிலத்தில் 2015 ஆம் ஆண்டு, உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்க கல்வி தகுதி அவசியம் என சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. தற்போது புதிய அரசு பதவியேற்றபிறகு அந்த சட்டதிருத்தத்தை நீக்கியுள்ளது.
இதற்கு முன்னர்,
முனிசிபல் தேர்தலில் பங்கேற்க 10 ஆம் வகுப்பும்
சர்பான்ச் பதவிக்கு 8 ஆம் வகுப்பும்
மாவட்ட பரிஷத் பதவிக்கு 10 ஆம் வகுப்பும் படித்திருக்க வேண்டும்
மகாராஜா சுகல்தேவ் (Maharaja Suheldev) அவர்களின் தீரத்தையும் அர்ப்பணிப்பையும் போற்றும் விதமாக அஞ்சல் தலையை பிரதமர் வெளியிட்டார்
ஒரு மாவட்டம், ஒரு பொருள் தயாரிப்பு (One District, One Product Scheme)
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு மாவட்டம், ஒரு பொருள் தயாரிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது
பல பாரம்பரிய பொருள்கள் தயாரிப்பின் பிறப்பிடமாக இருக்க கூடிய உத்திரபிரதேசத்தில் பாரம்பரிய பொருள்களின் உற்பத்தியை அதிகமாக்கிட இந்த திட்டம் உதவும்
[easy-notify id=823]
Swachh Survekshan 2018 Ranking
2018 ஆம் ஆண்டின் தூய்மை நகரங்கள் பட்டியலில் (Swachh Survekshan 2018 Ranking) திட கழிவு மேலாண்மையில் சிறந்த நகரமாக “ஹைதராபாத்” நகரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Previous Current Affairs : Click here
Take Sample Test here : Click Here
TECH TAMILAN