அத்தனை பாகங்களையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஓர் அமைப்புதான் மதர்போர்டு [Motherboard].ஆகையால்தான் மதர்போர்டு கணிணியின் முதுகெலும்பு என கருதப்படுகிறது.
மதர்போர்டு (Motherboard) என்பது கணிணியில் இருக்கக்கூடிய முக்கிய பாகங்களான CPU , இன்புட் மற்றும் அவுட்புட் பாகங்கள் (I/O Devices) , RAM, ROM போன்ற மெமரிகள் , வீடியோ கார்டு , ஆடியோ கார்டு போன்ற அனைத்து பாகங்களையும் நேரடியாகவோ அல்லது கேபிள் மூலமாகவோ இணைக்கும் ஓர் அமைப்பு. அத்தனை பாகங்களையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய ஓர் அமைப்புதான் மதர்போர்டு. ஆகையால்தான் மதர்போர்டு கணிணியின் முதுகெலும்பு என கருதப்படுகிறது.
Motherboard Manufacturers
Intel
ASUS
AOpen
ABIT
Biostar
Gigabyte
MSI
கணிணியில் பயன்படுத்தப்படும் பிற உபகரணங்களை இணைப்பதற்கான போர்ட்கள் கொண்ட ஒரு சர்கியூட் போர்டு (Electronic Circuit Board) உட்புறமாக பாதுகாப்பாக வைக்கபட்டிருக்கும் . CPU வை இணைப்பதற்காக ஒரு போர்ட் , மெமரிக்காக ஒன்று அல்லது இரண்டு ஸ்லாட்கள் (slots) இருக்கும் . மேலும் மற்ற பாகங்களை இணைப்பதற்கான போர்ட்கள் இருக்கும் . அதோடு சேர்த்து வெப்பத்தை குறைப்பதற்காக மின்விசிரி (fan) மற்றும் மின் இணைப்பிற்கான போர்ட் (Power Card) ஒன்றும் இருக்கும் .
மேலும் மதர்போர்டில் பென்ட்ரைவ் (Pendrive) , மொபைல் (Mobile) அல்லது கேமரா (Camera) போன்றவற்றினை இணைத்து பயன்படுத்திட USB போர்ட்களும் வைக்கப்பட்டிருக்கும்.
கம்ப்யூட்டர் பற்றி மேலும் விரிவாக தெரிந்துகொள்ள Click Here
TECH TAMILAN