Current affairs December 27


முத்தலாக் சிறப்பு சட்டம் லோக்சபாவில் நிறைவேறியது

சிறப்பு அம்சங்கள் :

கடிதம் மூலமாகவோ அல்லது மின்னணு முறையிலோ எந்தவிதத்திலும் முத்தலாக் சொல்லி விவகாரத்து பெறுவது தண்டணைக்குரிய குற்றம்

பாதிக்கப்பட்ட பெண் அல்லது அவரது ரத்த சம்பந்த உறவுகள் புகார் அளிப்பதற்கு உரியவர்கள்

மூன்றாண்டு சிறை தண்டணை மற்றும் அபராதம் விதிக்கப்படலாம் .


குவாலியரில் நடந்த தான்சென் (Tansen) இசை திருவிழாவில் புகழ்பெற்ற கிடார் இசைக்கலைஞர் மஞ்சு மேத்தா  அவர்களுக்கு மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்களால் வழங்கப்பட்டது


அந்தமான் தீவுகளுக்கு பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளது

அந்தமானில் இருக்கக்கூடிய ரோஸ் , நெய்ல் , ஹேவ்லாக் போன்ற தீவுகளுக்கு பெயர்மாற்றம் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது .

அதன்படி பின்வருமாறு பெயர்மாற்றம் செய்யபடவுள்ளது ,

> ரோஸ் தீவு – சுபாஷ் சந்திர போஸ் தீவு

> நெயில் தீவு – ஷாஹீத் திவீப் தீவு

> ஹேவ்லாக் தீவு – சுவராஜ் திவீப் தீவு


இந்தியாவின் மிகப்பெரிய கேன்சர் மருத்துவமனை ஹரியானா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டதில் அமைக்கப்படவுள்ளது . மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் JP நட்டா அறிவிப்பு


குழந்தைகளை பள்ளிகளில் சேர்க்கும்போது கட்டாயமென கூறி ஆதார் அடையாள அட்டையை கேட்பது சட்டப்படி குற்றமெனவும் , சுப்ரீம் கோர்ட் உத்தரவிற்கு எதிரானது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது .


மத்திய உள்துறை அனுமதியளித்துள்ள 10 நிறுவனங்கள் கணிணியை கண்கணிக்கலாம் என்ற உத்தரவினை எதிர்த்து மனோகர் லால் சர்மா என்ற வழக்கறிஞர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார் .

Join What’sApp Group : https://chat.whatsapp.com/IXvSWXK78rZJn9Sy0xYqeC


TECH TAMILAN