Sunday, October 6, 2024
Home7 Matters1 கோடி பேர் பஞ்சத்தால் இறந்த 1770 வங்காளப் பஞ்சம் : bengal famine 1770...

1 கோடி பேர் பஞ்சத்தால் இறந்த 1770 வங்காளப் பஞ்சம் : bengal famine 1770 | 7 Matters

#7Matters

இடம் மாறினால் காட்சி மாறலாம் என நினைத்த விவசாயிகளின் எண்ணத்திற்கு மாறாக போன இடங்களிலும் வறட்சியே நிலவியது. வேறு வழியில்லாமல் அவர்கள் மரணத்தை தழுவினார்கள். வேறு இடம் போனவர்களுக்கு மட்டுமல்ல சொந்த ஊரில் தங்கியவர்களுக்கும் இதே நிலை தான். மண்ணிற்கு அதிகம் சுமை வைக்காத மெலிந்த உடல்கள் ஆங்காங்கே இருந்தன


இந்தியாவில் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சி செய்ததனால் தான் நல்ல ரயில்வே அமைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் ஓரளவேனும் ஏற்பட்டது. இல்லையேல் இந்தியா இன்னும் பின்தங்கிய நிலையில் தான் இருந்திருக்கும். இப்படி பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஊன்றுகோல் பிடிக்கும் பலருக்கு பிரிட்டிஷ்காரர்கள் நம்மை சுரண்டவே இப்படி செய்தார்கள் என்று சொன்னாலும் புரிவதில்லை. இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் ஒரு கொடூர நிகழ்வு பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின் கோரமுகத்தை நமக்கு வெட்டவெளிச்சமாக்கும்.

1. இந்தியாவில் இதுவரை நடந்திட்ட கொடூர சம்பவங்களை வரிசைப்படுத்தினால் முதல் இடத்தை பிடிக்க எந்தவிதத்திலும் குறைவில்லாத கொடுமை உடையது ‘1770 வங்காளப் பஞ்சம்’. சுமார் 1 கோடி பேர் இந்தப் பஞ்சத்தால் இறந்து போனார்கள். அதற்கும் மேற்பட்ட பலர் வீடுகளை உடைமைகளை இழந்து தவித்தனர்.

2. முகலாயர்கள் ஆட்சியில் இந்திய விவசாயிகள் விளைச்சலில் 15% ஐ வரியாக செலுத்தி வந்தார்கள். இப்படி வசூல் செய்திடும் வரியானது வறட்சி ஏற்படும் போது விவசாயிகளுக்கு உதவி செய்வதற்காகவும் பயன்படுத்தப்பட்டது. 1965 இல் வரி வசூலிக்கும் உரிமை அலகாபாத் ஒப்பந்தத்தின் மூலமாக உரிமை முகலாய மன்னர் இரண்டாம் ஆலம் ஷாவிடமிருந்து கிழக்கிந்திய கம்பெனிக்கு சென்றது. இதன் விளைவாக ஒரே இரவில் வரி 50% ஆக உயர்ந்தது. ஆங்கிலேயர்கள் தான் இப்படி வரியை உயர்த்தினார்கள் என்பது கூட விவசாயிகளுக்கு தெரியவில்லை.

3. பஞ்சத்திற்கு பழக்கப்பட்டுப்போய் தான் இருந்தார்கள் இந்திய விவசாயிகள். ஆனால் உயர்த்தப்பட்ட வரி காரணமாக அவர்கள் கொடுமையை அனுபவிக்கத் துவங்கியிருந்தார்கள். 1969 இல் ஏற்பட்ட வறட்சி அவர்கள் நிலையை மேலும் கேள்விக்குறியாக்கியது. இன்றைய மேற்கு வங்காளம், பீகார், ஒரிஸா, ஜார்க்கண்ட், பங்களாதேஷ் ஆகிய இடங்கள் இந்த பஞ்சத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டன.

4. இடம் மாறினால் காட்சி மாறலாம் என நினைத்த விவசாயிகளின் எண்ணத்திற்கு மாறாக போன இடங்களிலும் வறட்சியே நிலவியது. வேறு வழியில்லாமல் அவர்கள் மரணத்தை தழுவினார்கள். வேறு இடம் போனவர்களுக்கு மட்டுமல்ல சொந்த ஊரில் தங்கியவர்களுக்கும் இதே நிலை தான். மண்ணிற்கு அதிகம் சுமை வைக்காத மெலிந்த உடல்கள் ஆங்காங்கே இருந்தன.

5. முன்பெல்லாம் இப்படி பஞ்சம் ஏற்பட்டால் ஏற்கனவே வசூலித்த வரியைக்கொண்டு நடவெடிக்கைகளை மேற்கொண்டு மீட்பு பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அப்படிப்பட்ட எந்த நடவெடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மரணங்கள் தொடர்ச்சியாக அதிகரித்தன. இதில் கொடுமையான விசயம் என்னவென்றால் விவசாய பெருமக்களுக்கு உதவவேண்டிய ஆட்சியாளர்களோ உதவி செய்யாமல் வரியை 60% ஆக உயர்த்தினார்கள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக அமைந்தது வறுமையில் வாடியவர்களுக்கு.

6. 1970 இல் துவங்கிய இந்த மரணங்கள் 1973 வரை நீடித்தன. சுமார் 1 கோடி மக்கள் இந்த கொடும் பஞ்சத்தில் மாய்ந்து போனார்கள். இதற்கு பஞ்சம் தான் காரணம் என வாதாடினாலும் அப்போதைய ஆட்சியாளர்களின் கஜானா நிரப்பும் பேராசைதான் இந்த மரணங்களுக்கு முக்கியக்காரணமாக அமைந்தது. இந்தப்பஞ்சத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாம் உலகப்போரில் இறந்த யூதர்களின் எண்ணிக்கையை விட அதிகம்.

7. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எப்படி இந்திய மக்களை எண்ணினார்கள் என்பதற்கு வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் வாக்குமூலமே சாட்சியாகும். “நான் இந்தியர்களை வெறுக்கிறேன். அவர்கள் காட்டுமிராண்டிகள். அவர்களின் மதம் காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் முயல்களைப் போல வதவதவென இனப்பெருக்கம் செய்வதால்தான் பஞ்சம் வருகிறது”



Get updates via whatsapp





Sridaran
Baskaran

Blogger

Sridaran Tech Tamilan
நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular