Thursday, November 21, 2024
HomeBiographyநிலவில் கால் பதித்த முதல் மனிதன், நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தின பகிர்வு | neil...

நிலவில் கால் பதித்த முதல் மனிதன், நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தின பகிர்வு | neil armstrong

நீல் ஆம்ஸ்ட்ராங்

Happy Birthday

அவருடைய மரணத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “அமெரிக்க விண்வெளி வீரர்களில் மிகச் சிறந்தவர் – அவருடைய காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும்” என்ற அறிக்கையை வெளியிட்டு கெளரவப்படுத்தியது.




Click Here! Get Updates On WhatsApp

1932 ஆம் ஆண்டு இரண்டு வயது சிறுவனொருவன் தனது தந்தையுடன் விமான சாகச நிகழ்ச்சிக்கு செல்கிறான். அங்கு நடந்த சாகச நிகழ்ச்சியைக் கண்டு உள்ளம் கொள்ளைகொண்டு ஆர்ப்பரிக்கிறான். அதன் பின்னர் தனது தந்தையுடன் அவனது ஆறாம் வயதில் விமானத்தில் பறக்கிறான். அதிலிருந்து அவனுக்கு விமானத்தின் மீது அளவில்லா பிரியம் உண்டாகி தானும் ஒரு விமானியாக வரவேண்டுமென்று உறுதிகொள்கிறான். பின்னாட்களில் நம்மை இந்த உலகம் நினைவில் வைத்துக்கொள்ளப்போகிறது என அவன் அப்போது எண்ணியிருக்க வாய்ப்பில்லை. 

 

அந்த சிறுவன் வேறு யாருமல்ல,  இளம்வயதிலேயே விமானியாக உருவெடுத்து பல்வேறு விமானங்களை இயக்கி இறுதியில் நிலவிலும் தன் கால்களை பதித்த நீல் ஆல்டென் ஆம்ஸ்ட்ராங் தான் அந்த சிறுவன்.

ஆம்ஸ்ட்ராங் பிறப்பு மற்றும் படிப்பு

ஆம்ஸ்ட்ராங் சிறுவயது

1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஓஹியோவில் உள்ள வாப்கோநெட்டா நகரில் [Wapakoneta, Ohio, United States] ஸ்டீபன் கோயினிக் ஆம்ஸ்ட்ராங் மற்றும் வயோலா லூயிஸ் ஏங்கல் ஆகியோருக்கு முதல் மகனாகப் பிறந்தார் ஆம்ஸ்ட்ராங். அவரது தந்தை ஓஹியோ மாநிலத்தின் ஆடிட்டராக  பணிபுரிந்தார். ஆம்ஸ்ட்ராங்கிற்கு இரண்டு வயதாக இருந்தபோது அவரது தந்தை க்ளீவ்லேண்ட் விமான சாகச பந்தயத்திற்கு அழைத்துச் சென்றார். அதன் பின்னர் 1936 ஆம் ஆண்டு “டின் கூஸ்” என்று அழைக்கப்படும் ஃபோர்டு டிரிமோடர் விமானத்தில் இருவரும் பயணம் செய்தனர். அதிலிருந்தே ஆம்ஸ்ட்ராங்கிற்கு விமானத்தின்மீது தனிப்பிரியம் உண்டானது. 

 

வாப்கோநெட்டா விமானநிலையத்தில் விமானிக்கான பயிற்சி மற்றும் படிப்பினை முடித்த ஆர்ம்ஸ்ட்ராங் தனது 16-வது வயதில் விமானம் ஓட்டிக்கான உரிமத்தையும், விமான ஓட்டுநர் உரிமத்தையும் பெற்றார். அத்துடன் சாரணர் ஆண் இயக்கத்தில் அதிக ஈடுபாடுகள் கொண்டிருந்தமையால் அமெரிக்காவின் புகழ்பெற்ற விருதான ஈகிள் ஸ்கவுட் மற்றும் சில்வர் பஃபேலா முதலிய விருதுகளை பெற்றார்.

கொரியா போரில் ஆம்ஸ்ட்ராங்

1949 -ஆம் ஆண்டு விமானப் பயிற்சிக்காக கடற்படை விமானத்தலமான பென்சாகோலாவிலிருந்து அழைப்பு வந்திருந்தது. 18 மாதங்கள் நீடித்த பயிற்சியில் ஆம்ஸ்ட்ராங் வெற்றிபெற்று, கப்பல் விமானப் படை ஸ்கோட்ரான் 7 இல் தனது முதல்பணியை ஆரம்பித்தார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஃபெடரல் ஸ்கோட்ரான் 51 (VF-51), அனைத்து ஜெட் விமானப்படைக்கு நியமிக்கப்பட்டார். 1951 -ஆண்டு ஜூன்  மாத இறுதியில், எசெக்ஸ் கப்பல் தனது VF-51 விமானங்களுடன் கொரியாவுக்கு புறப்பட்டது.

 

முதலில் ஆம்ஸ்ட்ராங் புகைப்பட உளவுத் திட்டத்தின் துணை விமானியாக கொரிய யுத்தத்தில் பங்கேற்றார். பின்னர், வொன்சனின் மேற்குப் பகுதியான மஜோன்-நியின் தெற்கே பிரதானப் போக்குவரத்து மற்றும் சேமிப்பக வசதிகள் மீது ஆயுதமேந்திய விமானதுடன் அவர் பறந்தார். சுமார் 350 ம்ph (560 kம்/h) வேகத்தில் சென்ற   ஆம்ஸ்ட்ராங்கின் F9F பாந்தர் விமானம், விமான எதிர்ப்பு ஏவுகனையால் தாக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் விமானத்தை நட்பு பிரதேசத்திற்கு பறந்து சென்று அவர் தண்ணீரில் விமானத்தை இறக்க திட்டமிட்டார் ஆனால், ஆபத்துக் கால தப்பிக்கும் வழிமுறையை பயன்படுத்தி வெளியேற முயன்று நிலத்தில் இருக்கையுடன் தூக்கி வீசிப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொரியா மீது 78 முறை பறந்தார் மொத்தம் 121 மணி நேரம் காற்றில் பறந்தார்.

அப்பல்லோ திட்டம்

நீல் ஆம்ஸ்ட்ராங்

அப்பல்லோ திட்டம் என்பது மனிதனை விண்வெளிக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்து மீண்டும் பூமிக்கு பாதுகாப்பாக கொண்டுவருவதையே நோக்கமாகக் கொண்டிருந்தது. 1960 முதல் 1969 -க்கு முன்புவரை 3 விண்வெளிவீரர்களை இந்த ஆராய்ச்சியில் இழந்தது. இதனால், இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டது நாசா. இருப்பினும், அப்பல்லோ 11 விண்கலம், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி 39ஏ ஏவுதளத்திலிருந்து நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின் மற்றும் மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் விண்வெளிப் பயணத்தைத் தொடங்கியது நாசா.

 

சந்திரனை அடைந்த அப்பல்லோவின் கட்டுப்பாட்டு ஓடத்தில் மைக்கேல் கொலின்ஸ் தங்கிக் கொள்ள, நீல் ஆம்ஸ்ட்ரோங் முதலி்ல் நிலவில் காலடி எடுத்துவைத்தார். அவரைத் தொடர்ந்து 19 நிமிடங்கள் கழித்து இரண்டாவதாக  எட்வின் ஆல்ட்ரின் இறங்கினார். நான்கு நாள் நிலவுப் பயணத்தை முடித்துக்கொண்டு வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது அப்பல்லோ 11. திரும்புவதற்கு முன்பு, எட்வின் ஆல்ட்ரினும், நீல் ஆம்ஸ்ட்ராங்கும் நிலவில் அமெரிக்க கொடியை நாட்டினர். அப்போது அவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்தனர்.

 

பூமிக்கு திரும்பிய மூவருக்கும் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. மேலும் , ஆம்ஸ்ட்ராங்கிற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப்பதக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன், 17 நாடுகளில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகவும் ஆம்ஸ்ட்ராங் பணியாற்றினார். 

நிலவு பயணமும் சந்தேகங்களும்

நிலவைப் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் 1930 – லேயே சோவியத் யூனியன் ஆரம்பித்தது. 20 -க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை விண்வெளிக்கு அனுப்பி வெற்றிகண்ட சோவியத் யூனியன் 1957 -ல் லைக்கா என்னும் நாயை விண்வெளிக்கு அனுப்பி உயிருடன் பூமிக்கு திரும்ப கொண்டுவந்தனர். பின்னர், மூன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பிய சிறிது நேரத்திலேயே விண்கலம் வெடித்துச் சிதறியது. இதனால் சோவியத் யூனியன் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ஆராய்ச்சியை கைவிட்டது. எதிலும் போட்டிபோட்டுக்கொள்ளும் அமெரிக்கா சோவியத் யூனியனுடனான நிலவுப் பயணத்திலும் போட்டியிட்டு சோவியத் யூனியன் தோல்வியடைந்த, மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தை தாங்கள் தொடர்வதாக அறிவித்தனர். 

 

20/6/1969 அன்று அப்பலோ 11 விண்கலத்திட்டத்தின் படி நீல் ஆம்ஸ்ரோங் நிலவில் காலடிவைத்ததாக உலகம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. நாசாவின் நிலவுத் திட்டத்தை துவக்கத்திலிருந்தே சந்தேகத்துடன் பார்த்துவந்த ரஷ்யர்கள், அடுக்கடுக்கான பின்வரும் கேள்விகளை வைத்தது. ஆனால், நாசாவின் பதில் அவர்களுக்கு திருப்தியளிக்கவில்லை.

 

கேள்வி 1: அமெரிக்கா அப்போலோ 11-க்குப் பிறகு ஏன் அமெரிக்கா எந்தவொரு நிலவு ஆராய்ச்சியையும் தொடரவில்லை?

 

கேள்வி 2: நிலவில் காற்று இல்லை பின்னர் எப்படி அமெரிக்க கொடி அசைந்தது?

 

நாசா பதில்: நிலவில் காற்று இல்லை எனக் கூறுவது உண்மைதான். ஆனால், அது கொடிக்கம்பம் ஊன்றும்போது ஏற்பட்ட அதிர்வு மேலே சென்று கொடியை அடைய கொடியும் அதிர்ந்தது. அதனால்தான் கொடி அசைவதுபோல உள்ளது .

 

கேள்வி 3: நிலவிற்கு ஒளிதரும் ஒரே ஒரு கோள் சூரியன். ஆதலால், ஒரே திசையில் தான் விண்வெளிவீரர்களின் நிழல்கள் விழவேண்டும். ஆனால், புகைப்படத்தில் ஏன் இரண்டு திசைகளில் நிழல்கள் விழுகின்றன? 

நாசா பதில்: நிலவின் தரை புவியின் தரை போன்று நீண்டதூர சமமான தரை அல்ல, பல குன்றுகள் மலை வடிவங்களாலான தரை. எனவே, குன்றுகளில் பட்டுத்தெறித்த ஒளியினால் நிழலில் மாற்றம் ஏற்பட்டது.

 

கேள்வி 4: நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஏன் ஒரு நட்சத்திரம்கூட இடம்பெறவில்லை? 

நாசா பதில்: நிலவிலிருந்து படங்கள் எடுக்கப்பட்டது காலை நேரம். எனவே சூரிய ஒளியில் நட்சத்திரங்கள் தென்படவில்லை.

 

கேள்வி 5: நிலவில் எடுக்கப்பட்ட புகைப்படத்திலுள்ள ஒரு பாறையில் எப்படி ‘C’ என்னும் குறியீடு உள்ளது? 

நாசா பதில்: இது உண்மைப்படமல்ல. யாரோ எடிட் செய்துள்ளனர்.

 

கேள்வி 6: பதிவான ஒவ்வொரு புகைப்படத்திலும் ‘+’ (cross – hairs) என்னும் குறியீடு உள்ளது. ஆதலால், இந்த புகைப்படங்கள் அனைத்தும் திட்டமிட்டு எடுக்கப்பட்டு, நம்பும்படியாக எடிட் செய்யப்பட்டது எனக்கூறினர். இந்தக் கேள்விக்கு இன்றுவரை நாசா எந்தவொரு பதிலையும் கூறவில்லை.

 

கேள்வி 7: புகைப்படத்திலுள்ள பாதச்சுவடுகள் எதோ ஈரப்பதமுள்ள மண் மீது படிந்த சுவடுகள் போன்று மிகத் தெளிவாக இருப்பதாக உள்ளது. நிலவின் மண்ணில் ஈரப்பதம் இல்லாதபோது எவ்வாறு அங்கே இத்தனை துல்லியமாக சுவடுகளை பதிக்க முடியும்?  

 

நாசா பதில்: ரெகலெத் எனப்படும் நிலவு மண் எரிமலை சாம்பலைப் போன்றது. நன்றாக அரைக்கப்பட்ட மாவுடன் இதனை ஒப்பிடலாம். எனவே அதன் மீது நீங்கள் நடக்கும் போது இயற்கையாகவே அது ஒன்றோடு ஒன்று எளிதில் குழைந்து பின் பிணைந்து உங்கள் காலனியின் பதிவை உண்டாக்கிவிடும்.

 

ஒவ்வொரு முறையும் அமெரிக்காவின் நிலவுப்பயணம் என்பது கேள்விகளுக்கு உள்ளாக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நாசாவும் மற்ற விஞ்ஞானிகளும் அதற்க்கு பதில் அளித்துக்கொண்டே இருக்கிறார்கள். சந்தேகங்கள் தொடர்ந்தாலும் நிலவில் கால் தடம் பதித்த முதல் மனிதன் என  நீல் ஆம்ஸ்ட்ராங் நிலைத்துவிட்டார்

ஆம்ஸ்ட்ராங்கின் இறுதிக்காலம்

2012- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி, ஆம்ஸ்ட்ராங்கிற்கு இதயத்தில் மாற்றுப்பாதை (bypass) அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சைக்குப்பின் உடல் நலத்தில் நன்கு முன்னேற்றம் ஏற்பட்டிருந்தாலும், மருத்துவமனையில் திடீரென்று அவர் உடல் நலத்தில் சிக்கல்கள் உருவாகியதால் ஆகஸ்ட் 25 ஆம் தேதியன்று சின்சினாட்டியில் இறந்தார். அவருடைய மரணத்திற்குப் பின்னர், வெள்ளை மாளிகையால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், “அமெரிக்க விண்வெளி வீரர்களில் மிகச் சிறந்தவர் – அவருடைய காலத்தில் மட்டுமல்ல, எல்லா காலத்திலும்” என்ற அறிக்கையை வெளியிட்டு கெளரவப்படுத்தியது.


Click Here! Get Updates On WhatsApp






Vinoth Kumar

கட்டுரையை எழுதியவர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular