TNPSC Current Affairs January 08 – January 09


குளோபல் சோலார் கவுன்சில்

> குளோபல் சோலார் கவுன்சிலின் தலைவராக பிரநாவ் R மேத்தா தலைவராக நியமனம்

> குளோபல் சோலார் கவுன்சிலின் தலைவராக பதவியேற்கும் முதல் இந்தியர் இவர் தான்


Khelo India Youth games

2019 ஆம் ஆண்டிற்கான கெலோ இந்தியன் யூத் விளையாட்டு போட்டிகள் புனேவில் நடக்க இருக்கிறது

Under 17 மற்றும் Under 21 என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும்


அயோத்தி ராமஜென்ம பூமி வழக்கு

> அயோத்தி ராமர் கோவில் வழக்கு விசாரணைக்கு 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டது

> தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் எஸ்.ஏ.பாப்டே, என்.வி.ரமணா, யு.யு.லலித், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய நீதிபதிகள் இடம்பெறுகிறார்கள்


குடியுரிமை சட்டம் 2019

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாத பிற மதத்தினர், தொடர்ந்து ஆறு ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவெடுத்திருந்தது. இதற்காக 1955-ல் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 2016-ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த சட்ட திருத்தத்தின் மூலம், இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜெயின் சமூகத்தினர், பார்ஸீஸ் இனத்தவர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோர், 6 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தாலே, அவர்களுக்கு இந்தியக்குடியுரிமை கிடைக்கும்.


IMF – சர்வதேச நாணய நிதியம்

89 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட சர்வதேச நிதியம்(ஐ.எம்.எப்.) அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகளாவிய நிதி ஒத்துழைப்பு, நிதி ஸ்திரத்தன்மை, சர்வதேச வர்த்தக வசதிகளை ஏற்படுத்தி தருதல் போன்றவை இதன் முக்கிய பணிகளாகும்.

இந்த அமைப்பின் 11-வது தலைமை பொருளாதார ஆலோசகராக அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண் கீதா கோபிநாத்(48 வயது) நியமிக்கப்பட்டார். சர்வதேச நிதியத்தில் தலைமை பொருளாதார ஆலோசகர் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பதவி ஆகும்


தமிழ்நாட்டின் சேலம் மாவட்டமானது உலக கழிப்பறை தினப் போட்டியில் முன்னணி 12 மாவட்டங்களில் இடம் பிடித்துள்ளது.


கள்ளக்குறிச்சி

33 மாவட்டமாக கள்ளக்குறிச்சி அறிவிப்பு



Previous Current Affairs : Click here

Take Sample Test here : Click Here


TECH TAMILAN