தற்போது பெரும்பான்மையான இளைஞர்கள் இணையத்தின் மூலமாகவும் பிளாக்கிங் மூலமாகவும் சம்பாதிக்கின்றனர். நீங்களும் சம்பாதிக்க வேண்டுமா? படியுங்கள்.
உலகில் பெரும்பாலானவர்கள் இண்டெர்நெட் மற்றும் பிளாக்கிங் மூலமாக ஏராளமாக சம்பாதிக்கின்றனர். அது எப்படி என்பதை தான் இங்கே பார்க்க இருக்கிறோம். இன்று உலகம் முழுவதும் இணையத்தின் மூலமாக இணைந்துள்ளது. இன்று உற்பத்தியாளர்களும் கருத்து சொல்லிகளும் தங்கள் கருத்துகளையும் பொருள்கள் சம்பந்தப்பட்ட விளம்பரங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க இணையதளத்தில் விளம்பரங்களை செய்ய தொடங்கியுள்ளனர். இதற்க்கு முன்பு சுவரொட்டிகள் மூலமாகவும் பெரிய பெரிய கட்அவுட்கள் மூலமாகவும் நியூஸ் பேப்பர் மூலமாகவும் மட்டுமே விளம்பரம் செய்து கொண்டிருந்தவர்கள் இன்று இணையதளத்தில் விளம்பரம் செய்ய தொடங்கியுள்ளனர்.
இதற்க்கு முக்கிய காரணம் மக்களே, ஆம் இன்று மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை படிக்க விரும்பினாலோ அல்லது தேவையான பொருள்களை வாங்க விரும்பினாலோ முதலில் இணையத்திலேயே தேடி படிக்க முயல்கின்றனர். ஆகையால் இன்று இணையதளமும் இணையமும் புதிய பரிணாமத்தை ஏற்படுத்திவிட்டது.
சரி இணையதளத்தின் மூலமாக எப்படியெல்லாம் சம்பாதிக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
Marketers | விற்பனையாளர்கள்
முன்பு பொருள்களை வாங்க வேண்டுமானால் கடைகளுக்கு சென்று கூட்டத்தில் அலைமோதி நமக்கான பொருள்களை வாங்கிட வேண்டும். ஆனால் இன்று அப்படி அல்ல, வீட்டில் இருந்து கொண்டே இணையத்தின் உதவியால் குறிப்பிட்ட இணையத்தளத்திற்குள் நுழைந்து தங்களுக்கு வேண்டிய பொருள்களை பணம் செலுத்தி வாங்கினால் அது உடனடியாக தங்களது வீட்டிற்கே வந்துவிடும். உதாரணமாக அமேசான் (amazon) பிளிப்கார்ட் (Flipkart) உள்ளிட்ட இணையதளங்கள் இதற்கான சேவையை வழங்குகின்றன. இதன் மூலமாக இவர்கள் மிகப்பெரிய லாபத்தை அடைகின்றனர்.
Freelancers
நீங்கள் ஒரு சிறந்த மக்கள் விரும்பும் கருத்துக்களை எழுதும் திறமை கொண்டவராக இருந்தால் உங்களுக்கென்று இணையதளத்தை [blog] தொடங்கலாம். அதில் விளம்பரங்களை இடம்பெற செய்வதன் மூலமாக நீங்களும் சம்பாதிக்கலாம். இவ்வாறு இணையதளம் தொடங்கி அதன் மூலமாக பணம் சம்பாதிக்கும் பலர் இன்று உள்ளனர். இதற்க்கு முக்கிய மூலதனம் மக்கள் படிக்க விரும்பும் வகையில் எழுதக்கூடிய திறமை கொண்டவராக நீங்கள் இருக்கவேண்டும். பின்வரும் கட்டுரைகளில் இதுபற்றித்தான் நீங்கள் தெரிந்துகொள்ள இருக்கிறீர்கள்
VLOG | Youtube
ஒரு ஆய்வின் முடிவு இவ்வாறு கூறுகின்றது, இன்றைய மக்கள் அறிவையோ கருத்தையோ செய்தியையோ படித்து தெரிந்துகொள்வதைவிட வீடியோவாக பார்த்து புரிந்துகொள்வதில் தான் விருப்பம் கொண்டிருக்கின்றனர். ஆகையால் தான் இன்று அனைத்து விஷயங்களும் வீடியோ வடிவில் வந்து கொண்டிருக்கின்றன.
யூடியூப் ,நெட்பிலிக்ஸ் மற்றும் பல தளங்கள் இன்று வீடியோ மூலமாக சம்பாதிக்க உதவுகின்றன. ஆம் இன்று பல யூடியூப் சேனல்கள் நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் அறிவியல் பூர்வமான கருத்துக்களையும் வழங்கிவருவதை நம்மால் காண முடிகின்றது. அவர்களின் வீடியோவை நாம் பார்க்கக்கூடிய ஒவ்வொரு முறையும் தோன்றுகின்ற விளம்பரத்திற்கு குறிப்பிட்ட தொகையினை யூடியூப் அவர்களுக்கு வழங்கும்.
மக்கள் விரும்பக்கூடிய வகையில் வீடீயோவை வழங்கக்கூடிய திறமை உங்களிடம் இருந்தால் நீங்களும் இணையத்தின் மூலமாக சம்பாதிக்கலாம்.
யூடியூப் மூலமாக சம்பாதிப்பது எப்படி?
சிறு உற்பத்தியாளரா? | Small Industry
நீங்கள் ஒரு சிறு வியாபாரி என்று வைத்துக்கொள்வோம். உங்களால் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்ய முடியாது. ஆனால் இணையத்தின் உதவியால் ஒரு சில 1000 ரூபாய்க்கு உள்ளாகவே ஒரு இணையதளத்தை தொடங்கி அதில் உங்களது பொருள்களின் விவரங்களை பதிவு செய்தால் உலகின் எந்த மூலையில் இருப்பவராலும் உங்களது பொருள்களை குறித்து காண முடியும். அவர் விரும்பினால் உங்களோடு தொடர்பு கொண்டு வியாபாரம் செய்யலாம்.
நீங்கள் ஒரு பொருளை விளம்பரம் செய்திடும் போது உங்களது நிறுவனத்திற்கு ஒரு இணையதளம் இருந்தால் உங்கள் மீதான மதிப்பு மற்றும் நம்பிக்கை மக்களிடத்தில் கூடும்.
இன்று இணையதளம் தொடங்குவது எவராலும் முடிந்த ஒன்று. அதையும் தாண்டி உங்கள் இணையதளத்திற்கு மக்களை கவர்ந்திழுக்கும் திறம் கொண்ட எழுத்தாளராக நீங்கள் இருந்தால் மட்டுமே குறிப்பிட்ட வருமானம் உங்களுக்கு கிடைக்கும்.
சிறு வியாபாரிகள் நிச்சயமாக இணையத்தின் வீரியத்தை முறையாக பயன்படுத்திக்கொண்டால் பெரும் முதலாளிகளின் விளம்பர யுக்தியை உடைத்து மக்களிடம் உங்களது பொருள்களை கொண்டு சேர்த்து சிறந்து விளங்க முடியும்.
பல எழுத்தாளர்களின் நல்ல படைப்புகளை பதிப்பு நிறுவனங்கள் வெளியிடுவதில்லை. பிரபலமானவர்களின் கட்டுரைகளே விற்கின்றன என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். அவ்வாறு விடப்பட்ட எழுத்தாளர்கள் தங்களுக்கென இணையதளத்தை தொடங்கி அங்கே தங்களது படைப்புகளை வெளியிடலாம். உங்கள் படைப்புகள் மக்கள் விரும்பும் படி இருந்தால் வெற்றி உங்களுக்கே. பிறகு பதிப்பு நிறுவனங்கள் உங்களை தேடி வருவார்கள்.