Thursday, November 21, 2024
Home7 Matters7 உலகின் டாப் பணக்காரர்கள் யார் தெரியுமா? 7 richest person list

7 உலகின் டாப் பணக்காரர்கள் யார் தெரியுமா? 7 richest person list

Top Richest Man

உலக மக்களின் பெரும்பகுதி பணம் என்பது டாப் 10 உலக பணக்காரர்களிடம் தான் இருக்கிறது. அவ்வளவு பணம் யாரிடம் இருக்கிறது என்பதனை நாமும் தெரிந்து வைத்திருப்பது அவசியம் தானே.


https://www.youtube.com/watch?v=WVXZrsCVYO8

போர்பஸ் நாளிதழ் அன்றாட நிலைமையை வைத்து உலக பணக்காரர்களின் வரிசையை வழங்கி வருகிறது. இதில் தொடர்ச்சியாகவே முதலிடத்தில் இருப்பவர் 56 வயதான ஜெப் பெஸோஸ் [$185.2 B], இவர் அமேசான் நிறுவனத்தின் தலைவர் என்பது அனைவரும் அறிந்ததே. 1994 ஆம் ஆண்டு மிகச்சிறிய நிறுவனமாக துவங்கப்பட்ட அமேசான் இன்று இவரை உலகின் முதல் பணக்காரர் ஆக்கியிருக்கிறது. இவர் அமேசான் நிறுவனத்தின் 11.1 % பங்குகளை வைத்திருக்கிறார். மேலும் தலைமை செயல் அதிகாரியாகவும் இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு இவர் தனது மனைவியை விவாகரத்து செய்திடும் போது அப்போதிருந்த அமேசான் பங்குகளில் கால் பகுதியை அவருக்கு கொடுத்தார். 

இரண்டாம் இடத்தில் இருப்பவர் 49 வயதான எலன் மஸ்க். இவரது சொத்து மதிப்பு $147 பில்லியன். பல்துறை வித்தகர் என அறியப்படுகிற எலன் மஸ்க் தனது டெஸ்லா என்ற நிறுவனத்தின் மூலமாக எலெட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இது தவிர ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை துவங்கி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நாசாவுடன் இணைந்து இந்த நிறுவனம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 

மூன்றாம் இடத்தில் பெர்னார்ட் அர்னால்ட் & குடும்பம் [Bernard Arnault & family] இருக்கிறது. $146.1 பில்லியன் சொத்து மதிப்பை இவர் கொண்டிருக்கிறார். இவருக்கு முக்கிய வருமானம் LVMH என்ற நிறுவனத்தில் இருந்து கிடைக்கிறது. 

நான்காம் இடத்தில் $120.1 பில்லியன் சொத்துக்களுடன் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இருக்கிறார். இவருக்கு வயது 65. தற்சமயம் 1% மைக்ரோசாப்ட் பங்குகளை மட்டுமே பில்கேட்ஸ் வைத்திருக்கிறார். மீதமுள்ளவற்றை அவர் விற்றுவிட்டார். தனது பணத்தை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வைத்திருக்கிறார். பில்கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா பெயரில் இயங்கும் அறக்கட்டளைக்கு அவ்வப்போது பெரும் தொகையை கொடுத்து வருகிறார்கள். 

Neuralink’s Elon musk brain reading tech

ஐந்தாம் இடத்தில் இருப்பவர் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க். இவரது சொத்து மதிப்பு $98.3 பில்லியன். பேஸ்புக் நிறுவனத்தின் 15% பங்குகள் தற்போது இவர் வசம் இருக்கிறது. தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதும் புதிதாக விளம்பரதாரர்கள் இணைவதும் பேஸ்புக் வளர்ச்சியடைய பெரும் காரணமாக இருக்கிறது. 

ஆறாம் இடத்தில் லாரி எல்லிசன் [Larry Ellison] இருக்கிறார். 76 வயதாகும் இவர் ஆரக்கிள் நிறுவனத்தின் சேர்மனாக இருக்கிறார். இவரிடம் ஆரக்கிள் நிறுவனத்தின் 35.4% பங்குகள் இருக்கின்றன. 2018 ஆம் ஆண்டு 3 மில்லியன் டெஸ்லா பங்குகளை வாங்கியதன் மூலமாக டெஸ்லாவின் போர்டு உறுப்பினர்களில் ஒருவராகவும் இவர் மாறினார். 

ஏழாம் இடத்தில் 90 வயதாகும் வாரன் பபெட் [Warren Buffett] $85.6 பில்லியன் சொத்து மதிப்புடன் இருக்கிறார். உலகின் மிகச்சிறந்த முதலீட்டாளர் எனும் பெருமை உடைய இவர் Berkshire Hathaway எனும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கு கீழ் 60 நிறுவனங்கள் செயல்படுகின்றன. தனது 99% சொத்துக்களை தானமாக வழங்கப்போவதாக ஏற்கனவே அறிவித்துவிட்ட பபெட் இதுவரைக்கும் 40 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவின் முகேஷ் அம்பானி $76.5 பில்லியன் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் 9 ஆம் இடத்தில் இருக்கிறார். 63 வயதாகும் இவர் நடத்தும் ரிலையன்ஸ் நிறுவனம் பெட்ரோ கெமிக்கல்ஸ், எண்ணெய் மற்றும் எரிவாயு, தொலைத் தொடர்பு மற்றும் சில்லறை விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய முடக்க காலத்தில் ஜியோ நிறுவனத்தின் பங்குகளை விற்றதன் மூலமாக 20 பில்லியன் டாலர்களை அம்பானி திரட்டினார். 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular