Site icon Tech Tamilan

7 சுவாரஸ்யமான விசயங்கள்: நாசா [NASA – National Aeronautics and Space Administration]

விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக நாசாவின் OSIRIS-REx விண்கலம் வேகமாக சென்றுகொண்டிருக்கும் விண்கல் [asteroid ] ஒன்றில் தரையிறங்கிய நிகழ்வு பார்க்கப்படுகிறது. நாசாவின் விண்கலம் விண்கல்லில் இருந்து சிறிதளவு மாதிரிகளையும் கொண்டுவர இருக்கிறது. வரலாற்று சாதனையாக இது பார்க்கப்படுகிறது.

NASA

உலகில் இருக்கும் ஒவ்வொரு அறிவியல் படிக்கும் மாணவரும் ஆசைப்படுகிற விசயம் நாசாவில் பணியாற்றிட வேண்டும் என்பது தான். அப்படிப்பட்ட ஆர்வம் உங்களுக்கு இருந்தால் நாசா பற்றிய 7 சிறந்த தகவல்கள் அந்த ஆர்வத்தை மேலும் தூண்டும்.


https://www.youtube.com/watch?v=12vcTaozLas

1. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் [NASA – National Aeronautics and Space Administration] நாசா 1958 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டுவைட் ஐசனோவர் [Dwight Eisenhower] என்பவரால் துவங்கப்பட்டது. நாசா துவங்கப்படுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னர் தான் சோவியத் யூனியன் சார்பில் ஸ்புட்னிக் 1 என்ற செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கு பதில் தரும் நோக்கத்தில் தான் நாசா உருவாக்கப்பட்டது. 

 

 

2. நாசா உருவாக்கப்படுவதற்கு முன்னரே அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனங்கள் 13 முறை செயற்கைகோள்களை ஏவ முயற்சித்தன. இதில் நான்கு வெற்றியும் அடைந்தது. நாசா உருவாக்கப்பட்டது அக்டோபர் 01, 1958, அதற்கு அடுத்த 10 நாட்கள் கழித்து நாசாவின் மேற்பார்வையில் Pioneer 1 என்ற செயற்கைகோள் அனுப்பப்பட்டது. 

 

 

3. அமெரிக்க அதிபர் ஜான் எஃப். கென்னடி [John F. Kennedy ] 1960 ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை நடத்திக்காட்டும்படி நாசா விஞ்ஞானிகளுக்கு கட்டளையிட்டார். ஆனால் ஜூலை 20,1960 அன்று தான் அப்போலோ 11 திட்டத்தின் மூலமாக மனிதர்களை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி சாதித்தார்கள் நாசா விஞ்ஞானிகள்.

 

4. அப்போலோ திட்டத்தில் 12 விண்வெளி வீரர்கள் நிலவில் கால்பதித்து இருக்கிறார்கள். 1970 ஆம் ஆண்டில், ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்தபின் அப்பல்லோ 13 சந்திர தரையிறக்கம் நிறுத்தப்பட்டது.

 

 

5. நாசா ஒரு விண்கலத்தை வடிவமைத்திருக்கிறது, இது ஒரு அணு வெடிப்பைப் பயன்படுத்தி, வரவிருக்கும் சிறுகோளைத் திசைதிருப்பும் திறன் கொண்டது.

 

 

5. சுமார் 17,000 பேர் நாசாவிற்காக பணியாற்றி வருகிறார்கள். இவர்களின் பெரும்பாலானவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.

 

 

6. நவம்பர் 26, 2011 அன்று, நாசா செவ்வாய் கிரகத்திற்கு ஒரு பயணத்தைத் தொடங்கியது, இது செவ்வாய் கிரகத்தில் ஆகஸ்ட் 6, 2012 அன்று தரையிறங்கியது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்ந்தனவா என்பது இதன் முக்கிய ஆராய்ச்சி பணிகளில் ஒன்றாக இருந்தது. 

 

 

7. ஆர்ட்டெமிஸ் திட்டம் [Artemis program] என்பது நாசாவின் சந்திர ஆய்வு திட்டம். 2024 ஆம் ஆண்டு வாக்கில், நிலவில் முதல் பெண் மற்றும் அடுத்த ஆண் விண்வெளி வீரர்களை தரையிறக்க முடிவு செய்துள்ளது. 



Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version