Site icon Tech Tamilan

இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடையா? Cryptocurrency in tamil

BitCoin Explained in Tamil

BitCoin Explained in Tamil

வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தனியார் கிரிப்டோகரன்சிகளுக்கு தடை விதிக்கும் மசோதாவை இந்திய அரசு உருவாக்கிவருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதன் எதிரொலியால் ஏற்கனவே பின்னடைவை சந்தித்து வந்த முன்னனி கிரிப்டோகரன்சிகளின் விலை பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இந்த விசயத்தில் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கியதகவல்கள் இங்கே.

Important Facts : Private Cryptocurrency Ban In India

1. The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021 வருகிற குளிர்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. நவம்பர் 29 அன்று நாடாளுமன்றம் கூடுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

 

2. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோகரன்சியை ரிசர்வ் வங்கி வெளியிடுவதற்கான வரையறைகள் உருவாக்கப்படும், மற்ற தனியார் கிரிப்டோகரன்சிகள் அனைத்தும் இந்தியாவில் தடை செய்யப்படும் போன்ற அம்சங்கள் அதிலே இடம் பெரும்.

 

3. திடீரென உயரும் அல்லது வீழ்ச்சியை சந்திக்கும் கிரிப்டோகரன்சிகளின் ஆபத்து குறித்து மத்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே அதன் கவலையை தெரிவித்து இருந்தது. குறிப்பாக இரண்டு மடங்காக உயர்ந்த பிட்காயின் குறித்து அதன் விமர்சனம் இருந்தது.

 

4. தற்போது இந்தியாவில் இருந்து சுமார் 20 மில்லியன் மக்கள் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்திருக்கலாம் எனவும் இதன் மதிப்பு சுமார் 40,000 கோடி வரைக்கும் இருக்கும் எனவும் வல்லுநர்கள் கணித்திருக்கிறார்கள்.

 

5. குறைவான காலத்தில் அதிக லாபத்தை ஈட்டலாம் என்பது போன்ற விளம்பரங்களால் பலர் இந்த கிரிப்டோகரன்சிகளை வாங்க ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதனால் விளம்பரங்களை கட்டுப்படுத்தும் அம்சங்களும் மசோதாவில் இடம் பெறலாம்.

 

6 . கடந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தின்போது, கிரிப்டோகரன்சிகளை தடை செய்யப்போவது இல்லை ஆனால் அவற்றை வரையறை செய்யப்போகிறோம் என தெரிந்து இருந்தது கவனிக்கத்தக்கது. ஆனால் தற்போது தனியார் கிரிப்டோகரன்சியை தடை செய்திடும் முடிவிற்கு இந்திய அரசு வந்துள்ளது.

7. தற்போதைய சூழ்நிலையில் எல் சல்வேடார் நாடு தான் பிட்காயினை அங்கீகரிக்கப்பட்ட ஒரு நாணயமாக அறிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

கிரிப்டோகரன்சி குறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்திடுங்கள்

Exit mobile version