Site icon Tech Tamilan

கூகுளின் 5 முக்கிய அறிவிப்புகள் | 5 top announcement from Google | I/O 2019

Google-io

Google-io

Google-io

Google Annoucement

இந்த ஆண்டிற்கான I/O 2019 கலிபோர்னியாவில் இருக்கின்ற தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் அதன் முன்னனி நபர்கள் கூகுளின் வருங்கால செயல்பாடுகள் குறித்த கருத்துகளையும் தொழில்நுட்ப விசயங்களையும் பகிர்ந்துகொண்டனர். அதில் எப்போதும் போல “அனைத்து இடங்களிலும் , அனைவருக்காகவும் , அனைத்திலும் கூகுளின் பங்களிப்பு இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் மிக அதிக அளவிலான தரவுகளை (data) பயன்படுத்துகின்ற மற்றும் அதனை process செய்து பயனாளர்களுக்கு வழங்குகிற நிறுவனங்களில் முன்னனி நிறுவனம் கூகுள் (Google). கூகுள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் I/O நிகழ்வின் மூலமாக தனது புதிய தயாரிப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கமான ஒன்று. இந்த ஆண்டிற்கான I/O 2019 கலிபோர்னியாவில் இருக்கின்ற தலைமை அலுவலகத்தில் நடந்தது. அதில் அதன் முன்னனி நபர்கள் கூகுளின் வருங்கால செயல்பாடுகள் குறித்த கருத்துகளையும் தொழில்நுட்ப விசயங்களையும் பகிர்ந்துகொண்டனர். அதில் எப்போதும் போல “அனைத்து இடங்களிலும் , அனைவருக்காகவும் , அனைத்திலும் கூகுளின் பங்களிப்பு இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடந்தோறும் நடக்கின்ற I/O நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ள கூகுளின் 5 முக்கிய அறிவிப்புகள் என்னவென்பதை பார்க்கலாம்.

 
Google services work everywhere, for everyone, and for everything

PIXEL 3A AND PIXEL 3A XL

கூகுள் நிறுவனத்தின் மிக குறைந்த விலை பிக்சல் போன்களான PIXEL 3A மற்றும் PIXEL 3A XL இந்த நிகழ்வில் விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை $399 (இந்திய மதிப்பில் ரூ 27800). பல சிறப்பங்சங்களை கொண்டிருந்தாலும் waterproofing and wireless charging போன்ற சில சிறப்பம்சங்கள் இல்லை. கறுப்பு வெள்ளை மற்றும் பர்பில் நிறங்களில் வெளியாகி இருக்கக்கூடிய இந்த போன்களில் headphone jacks வருகிறது.

 







New Platform : ANDROID Q BETA

கூகுள் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை வடிமைத்துக்கொண்டு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே. அதில் டார்க் மோட் உள்ளிட்ட பல புதிய சிறப்பம்சங்கள் இருப்பது குறித்து டெக் தமிழன் இணையதளத்தில் பதிவிட்டு இருந்தோம். அதனை இங்கு படிக்கலாம். தற்போது ஆண்ட்ராய்டு Q இயங்குதளத்தின் பீட்டா வெர்சனை டவுன்லோடு செய்துகொள்ள முடியும்.

 
 
Read >> Android Q OS இன் சிறப்பம்சங்கள்
 

LIVE SUBTITLES ON ALL VIDEOS

கூகுள் Live Caption to all videos ஆப்சனை கொண்டுவர இருக்கிறது. நீங்கள் ஆப்பில் வீடியோ பார்க்கும்போதும் , Chat செய்திடும்போதும் கூட உங்களுக்கு Subtitles காட்டப்படும். இதன்மூலமாக காது கேளாதோர் மற்றும் கூட்டம் நெரிசலான இடங்களில் இருப்போரும் எளிமையாக செய்திகளை புரிந்துகொள்ள முடியும் மற்றும் தொடர்புகொள்ள முடியும்.

ANDROID UPDATES FASTER | Project Mainline


தற்போது நாம் பயன்படுத்துகிற மொபைல் நிறுவனம், அப்டேட் விட்டால் தான் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அப்டேட் செய்திட முடியும். இனி கூகுள் play store இல் ஆண்ட்ராய்டு அப்டேட் களை வெளியிட முடிவு செய்திருக்கிறது கூகுள். இதன்மூலமாக முழு அப்டேட்டையும் பெற முடியாவிட்டாலும் சில பொதுவான அப்டேட்களை தாமதமில்லாமல் பெற முடியும் என்கிறது கூகுள். உதாரணத்திற்கு “media components” for camera bugs

INCOGNITO MODE FOR GOOGLE MAPS

கூகுள் மேப்பில் இன்காக்கினிட்டோ ஆப்சனை அறிமுகப்படுத்தி இருக்கிறது கூகுள். இதன் மூலமாக இனி பிரைவேட் சர்ச்களை மேற்கொள்ள முடியும். இதற்க்கு முன்னர் நமது location history யை நீக்கிக்கொள்ளும் ஆப்சனை கூகுள் கொண்டுவந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read This post also : உங்களை பின்தொடரும் கூகுள், எப்படி தடுத்து நிறுத்துவது?


Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version