Site icon Tech Tamilan

விவசாயத்துறையில் கலக்கும் 5 ரோபோக்கள் | 5 Robots That Are Invading The Agriculture Industry

விவசாயத்துறையில் கலக்கும் ரோபோக்கள்

விவசாயத்துறையில் கலக்கும் ரோபோக்கள்

விவசாயத்துறையில் கலக்கும் ரோபோக்கள்

Robotic Machines

அதிகாரிக்கும் மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உணவுப்பொருள்களை உற்பத்தி செய்திட வேண்டுமெனில் இயந்திரங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமான ஒன்று. பல்வேறு நிறுவனங்கள் விவசாயத்துறையில் பங்களிக்கும் இயந்திரங்களை வடிவமைப்பதில் போட்டிபோட்டுக்கொண்டு செயல்படுகின்றன.

தற்போது 7.8 பில்லியன் [780 கோடி] ஆக இருக்கின்ற உலக மக்கள்தொகையானது 2050 க்குள் 900 கோடியை தாண்டிவிடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு மக்கள்தொகைக்கு ஏற்ற உணவை உற்பத்தி செய்வது என்பது மிகவும் சவாலான காரியம். தொழில்துறையில் மட்டுமே அக்கறை செலுத்திவந்த மிகப்பெரிய நிறுவனங்கள் இந்த உணவுத்தேவையை கருத்தில் கொண்டு விவசாயத்துறையிலும் கால்பதிக்க முயற்சி செய்துவருகின்றன.

பொருளாதார காரணங்களால் விவசாயத்தில் இருந்து மக்கள் வெளியேறி வேறு தொழிலுக்கு செல்லுதல், ஆட்கள் பற்றாக்குறை, செலவினம் ஆகிய காரணங்களால் விவாசாயம் நலிவடைந்த ஒரு தொழிலாக இந்தியாவில் மாறிவருகிறது. செலவினத்தை குறைக்கவும் ஆட்கள் பற்றாக்குறையை போக்கவும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் விவசாய இயந்திரங்களை வடிவமைத்துக்கொண்டே வருகின்றன. வெளிநாடுகளில் இப்படிப்பட்ட ரோபோக்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி உலகின் பல்வேறு பகுதிகளில் விவசாயத்துறையில் கலக்கும் சில ரோபோக்கள் பற்றித்தான் இந்தப்பதிவில் நாம் பார்க்க இருக்கிறோம்.

களையெடுக்கும் தானியங்கி ரோபோ [Ecorobotix]

https://youtu.be/4I5u24A1j7Iகளை எடுப்பது என்பது விவசாயத்தில் மிக முக்கியமான கடினமான பணி. வெகுநேரம் கவனத்தோடு குனிந்து களை பறிப்பது என்பது சவாலான காரியமும் கூட. இதற்காக Ecorobotix எனும் நிறுவனத்தின் களையெடுக்கும் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி செயல்படும் இந்த ரோபோ 100% தானியங்கி முறையில் செயல்படுகிறது. இதில் இருக்கும் GPS மற்றும் துல்லியமான கேமராக்கள் களை எது செடி எது என்பதனை வேறுபடுத்திக்காட்டிட உதவுகிறது. ஒரு நாளைக்கு 12 மணிநேரம் செயலாற்றும் இந்த ரோபோ பெரிய அளவில் மனித பணியாட்களின் தேவையை குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, ஸ்மார்ட் போன் மூலமாகவே கூட இந்த ரோபோவை கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்.

பழம் பறிக்கும் ரோபோ [Energid Citrus Picking System]

https://youtu.be/Gf60au-U318ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை இன்னும் பல பழங்களை பறிப்பதற்காக Energid நிறுவனம் ரோபோ ஒன்றினை உருவாக்கியுள்ளது. இந்த ரோபோவானது பழத்தின் காம்பை மிகச்சரியாக கத்தரித்து பழத்தை பறிக்கிறது. எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் கூட மிகவும் எளிமையாக பழங்களை பறிக்க முடியும். 2-3 நொடிகளுக்கு ஒரு பழம் வீதம் பறிக்க முடியும் என்கிறார்கள் இதனை உருவாக்கியவர்கள்.

ஸ்ட்ராபெர்ரி பழம் பறிக்கும் ரோபோ

மிகப்பெரிய பரப்பளவில் விவாசாயம் செய்யப்படும் ஸ்ட்ராபெர்ரி பழங்களை பறிப்பது என்பது சவாலான காரியம். அதுவும் சரியான பருவத்தை எட்டிய பழங்களை கண்டறிந்து பறிப்பது அதைவிட சிரமம். ஆனால் அந்த வேலையை மிகத்திறம்பட செய்யக்கூடிய “Agrobot E-Series” வகை ரோபோக்கள் ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

கீரையில் களை பிடுங்கும் ரோபோ

https://youtu.be/XH-EFtTa6IUட்ராக்ட்ர் உடன் இணைக்கப்பட்டு செயல்படும் இந்த LettuceBot2  ரோபோவானது கீரை சாகுபடியில் களைகளை மிகச்சரியாக கண்டறிந்து அகற்றிட உதவுகிறது. கிட்டத்தட்ட 90% களைகளை இந்த கருவியைக்கொண்டு மிகக்குறைந்த நேரத்தில் அகற்றிட முடியும்.

பயிர்களை பற்றி அறியும் ரோபோ [PrecisionHawk]

https://youtu.be/i3_8JIme8lUஇந்த வீடியோவில் இருப்பதைப்போல பறந்துபட்ட விவசாயப்பரப்பில் உள்ள பயிர்களின் நிலையை கண்காணிப்பதற்கு இந்தக்கவகை ட்ரோன்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றன. இவை மிகவும் துல்லியமாக பயிர்களின் நிலையை ஆராய்ந்து அவற்றை படம் பிடித்து டிஜிட்டல் தகவல்களாக அனுப்புகின்றன. அவற்றை ஆராய்ந்து என்ன பிரச்சனை என்பதை கண்டறிந்து குறிப்பிட்ட பகுதியில் கவனம் செலுத்த முடியும்.

இந்தியாவின் பெரிய பிரச்சனை


இந்தியாவை பொறுத்தவரைக்கும் ஒரு விவசாயி பயிர் செய்யும் பரப்பளவு என்பது குறுகியதாகவே இருக்கிறது. சிறு சிறு வயல்கள் இருப்பதனால் இயந்திரங்களை பயன்படுத்துவதென்பது சவாலான காரியமாக இருக்கிறது. ஆனாலும் இயந்திரங்களை பயன்படுத்தும் போக்கு என்பது அண்மையில் அதிகரித்து வருகிறது.

Click Here! Get Updates On WhatsApp





Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version