Site icon Tech Tamilan

5 ideas to avoid Memory Full Problem | மொபைல் மெமரி டிப்ஸ்


ஸ்மார்ட் போன் நம் அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. நல்ல கேமரா, பெரிய திரை, அதிக நேரம் சார்ஜ் நிற்கும் பேட்டரி, நல்ல லுக், அதிக மெமரி என ஒரு நல்ல மொபைல் போனுக்கான தகுதி என்பது நீண்டுகொண்டே இருக்கிறது. தற்போது அதிக ஸ்டோரேஜ் கொண்ட ஆப்கள் வந்துவிட்டன, எடுக்கும் புகைப்படங்களும் அதிக ஸ்டோரேஜ் கொண்டதாகவே இருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் 16GB, 32GB போன்ற அளவிலான ஸ்டோரேஜ் கொண்ட மொபைல் போன்களை வாங்குவோர் மிக விரைவில் “No Space – Memory Full Problem” என்ற பிரச்சனைக்கு ஆளாகின்றனர்.
 

 
கவலைப்பட வேண்டாம் நண்பர்களே, பின்வரும் எளிமையான வழிமுறைகளை பின்பற்றினாலே உங்களால் மெமரி பற்றாக்குறை பிரச்சனையில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும்.


 
Advertisement:
——————————————————————————————-




——————————————————————————————–


 

தேவையில்லாத ஆப்களை நீக்குங்கள்

 

Fin’s team appointed person to readout terms and conditions for the popular apps

ஒவ்வொருவரும் தங்களது மொபைல் போன்களில் குறைந்தபட்சம் 5 தேவையில்லாத ஆப்களையாவது இன்ஸ்டால் செய்து வைத்திருக்கிறோம். ஒரு நேரம் மட்டுமே தேவைப்படுகின்ற ஆப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்திய பிறகு அதனை நீக்க மறந்தும் விடுகிறோம். இப்போதே உங்களது மொபைலில் உள்ள தேவையில்லாத ஆப்களை நீக்குங்கள். இப்படி செய்தால் நிச்சயமாக உங்களது மொபைல் போன் ஸ்டோரேஜ் ஐ சேமிக்க முடியும்


 

தரவிறக்கம் செய்த பைல்களை நீக்குங்கள்

 
மின்னஞ்சல் மற்றும் பிரவுசர் உள்ளிட்டவற்றினை பயன்படுத்தும்போது நமக்கு தேவையான பைல்களை நாம் தரவிறக்கம் செய்து பயன்பத்துவோம், பின்னர் அவற்றை டெலீட் செய்யாமல் அப்படியே விட்டுவிடுவோம். உங்களது மின்னஞ்சலுக்கு வந்த பைல்கள் மின்னஞ்சலில் இருக்கும் என்பதனால் கவலைப்படாமல் உங்களது மொபைலில் இருந்து நீக்கி விடுங்கள்.


இதையும் படிங்க

குட்டி பிசினஸ் பன்றவங்க WhatsApp Business App கண்டிப்பா பயன்படுத்துங்க

5 வீடியோ எடிட்டிங் ஆப்ஸ்

ஒரிஜினல் லைசன்ஸ் இனி வேண்டாம், தெரியுமா?


 

ஆன்லைன் ஸ்டோரேஜ் ஐ பயன்படுத்துங்கள்

 

 
உங்களது கேமராவில் எடுத்த புகைப்படங்கள் மற்றும் டவுன்லோட் செய்யும் பிற பைல்கள் உள்ளிட்டவற்றை Google Photos, Google Drive போன்ற ஆன்லைன் ஸ்டோரேஜ்களில் பதிவேற்றிவிட்டு மொபைல்களில் இருந்து நீக்கி விடுங்கள். இதன் மூலமாக உங்களது மொபைல் ஸ்டோரேஜ் ஐ மிக எளிமையாக மிச்சப்படுத்திக்கொள்ள முடியும்.


 

Remove Cache Memory

 

 
மொபைலில் வாட்ஸ்ஆப், மெசஞ்சர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தும் நபர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய மெசேஜ் களை நீக்கிட பழகிக்கொள்ளுங்கள். அதனைப்போலவே மொபைலில் இருக்கும் Cache ஐ நீக்கிவிடுங்கள்.

“LITE Versions” ஆப்களை பயன்படுத்துங்கள்

நாம் பயன்படுத்துகின்ற ஆப்களில் பல மெமரி குறைவான “Lite versions” ஆப்களை வழங்குகின்றன. Facebook Lite App , Twitter Lite App , Messenger App போன்றவற்றை பயன்படுத்தலாம்.



 
Advertisement:
——————————————————————————————-




——————————————————————————————–


 

விலை குறைந்த மெமரி கார்டு வாங்கி போட்டுகொண்டால் இந்த பிரச்சனையை எளிமையாக தீர்த்துக்கொள்ளலாமே என நீங்கள் எண்ணலாம். ஆனால் மேற்கூறியவற்றை நீங்கள் செய்யாமல் போனால் எவ்வளவு பெரிய மெமரி கார்டு வாங்கி போட்டாலும் உங்களது மொபைல் ஸ்டோரேஜ் தீர்ந்துதான் போகும்.


 
TECH TAMILAN

Exit mobile version