சில தினங்களுக்கு முன்பாக #10YearChallenge சமூக வலைதளங்களில் பிரபலமானது . இந்த சேலஞ்ச் படி இப்போதுள்ள புகைப்படத்தையும் 10 வருடத்திற்கு முன்பு எடுத்த புகைப்படத்தையும் பதிவேற்ற வேண்டும் . ஏன் எதற்காக என ஆராயாமல் நம் மக்களும் நான் அப்போது அப்படியிருந்தேன் இப்போது இப்படியிருக்கிறேன் என புகைப்படங்களை பதிவேற்றினார்கள் .இன்ஸ்டாகிராமில் துவங்கிய இந்த சேலஞ்ச் facebook , twitter , WhatsApp status என நீண்டது . இதற்கு முன்பாக பக்கெட் சேலன்ச் , Falling Down சேலன்ச் என பல சேலஞ்சுகள் நடைபெற்றுவந்தன .
ஆனால் தற்போதைய சேலஞ்சில் facebook நிறுவனத்தின் சதி இருப்பதாகவும் தங்களுடைய முகங்களை கண்காணிக்கும் Face Recognition AI ஐ மெருகேற்றுவதற்காகவே இந்த சேலஞ்சை பிரபலப்படுத்தி விட்டிருக்கிறார்கள் எனவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது .
> Facebook தான் இந்த சேலஞ்சை துவங்கிவிட்டதா ?
> நாம் அப்லோட் செய்கின்ற போட்டாவை கண்காணிப்பதாக சொல்வது உண்மையா ?
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
Facebook Face Recognition AI
Let’s say you wanted to train a facial recognition algorithm on aging. What would do? Maybe start a meme like #10yearchallenge https://t.co/usFLAtMnAt
— Nicholas Thompson (@nxthompson) January 16, 2019
நாம் profile போட்டோவை வைக்கும் போது facebook நிறுவனத்தின் Face Recognition AI மூலமாக நமது முகம் ஸ்கேன் செய்யப்படும் . இது உண்மை . ஆகையினால் தான் நாம் நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை அப்லோட் செய்யும்போது tag ஆப்சனில் அவர்களுடைய பெயர் வருகின்றது .
10YearChallenge ஐ யார் துவங்கியது?
இந்த சேலஞ்சை பலரும் facebook தான் துவங்கியது என்றும் தங்களுடைய AI இன் படிப்பறிவை(learning) மேம்படுத்திடவே இவ்வாறு செய்கிறார்கள் எனவும் கூறினார்கள் .
இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள facebook நிறுவனம் நாங்கள் இந்த 10YearChallenge சேலஞ்சை அறிமுகப்படுத்தவில்லை எனவும் இன்ஸ்டாகிராமில் தனிநபர் ஒருவரால் துவங்கப்பட்டது பின்நாளில் பிரபலமடைந்துவிட்டது எனவும் தெரிவித்துள்ளது.
நமது புகைப்படத்தை கண்காணிக்கிறதா Facebook?
நாம் facebook இல் அப்லோட் செய்கின்ற ஒவ்வொரு போட்டோவையும் facebook ஸ்கேன் செய்துகொண்டுதான் இருக்கின்றது . இப்போது நாம் பகிர்ந்துகொள்கின்ற 10 வருட சேலன்ச் போட்டாவை வைத்துதான் நமது முக பாவங்களை அறிந்துகொள்ளவேண்டும் என்பதில்லை . நாம் தான் ஏற்கனவே வருடந்தோறும் புகைப்படங்களை அப்லோட் செய்துகொண்டே இருக்கிறோமே .அதையெல்லாம் செய்துவிட்டு இப்போது இந்த சேலஞ்சிற்கு அஞ்சுவது வீடு பற்றியெரியும் போது சூடத்தினால் உருவான நெருப்பிற்கு அஞ்சுவதை போன்றது .
நமது போட்டோவை ஸ்கேன் செய்வதை தடுக்க முடியுமா?
Settings > Privacy > Face Recognition > NO
உங்களது facebook இன் settings பகுதிக்குள் சென்று Face Recognition ஆப்சனை NO என வைப்பதன் மூலமாக பிறரோ நீங்களோ புகைப்படத்தை அப்லோட் செய்யும்போது உங்களுடைய profile போட்டோவுடன் ஒப்பீடு செய்யப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆனால் facebook இன் AI ஸ்கேன் செய்து தன்னகத்தே தகவலை வைத்துக்கொள்ளுமா என்பது போன்ற சரியான தகவல் இல்லை .
மூன்றாம் நிறுவனத்திடம் நமது தகவல் இருக்கும்போது கண்காணிக்காமல் இருக்கமாட்டார்கள் என நம்ப இயலவில்லை .
இதுபோன்ற தகவல்களை தமிழில் படித்து தெரிந்துகொள்ள subscribe செய்யுங்கள் .
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
TECH TAMILAN