Site icon Tech Tamilan

10+ WhatsApp New Features In Tamil

10+ whatsapp features in tamil

10+ whatsapp features in tamil

இன்றைய ஸ்மார்ட்போன் உலகில் WhatsApp சிறந்த தகவல் பற்றிமாற்றத்திற்கான ஓர் ஆப்பாக பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலானவர்கள் WhatsApp ஐ பயன்படுத்தினாலும் அதில் இருக்கக்கூடிய சிறந்த Features ஐ பலர் முழுமையாக பயன்படுத்துவது இல்லை. இந்தப்பதிவில், 10+ WhatsApp New Features என்ற தலைப்பில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய சிறந்த பயன்பாடுகளை பட்டியல் இட்டுள்ளேன். கூடுதலாக, வீடியோ ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

Hide/Lock WhatsApp Chat

நீங்கள் தொழில் நிமித்தமாகவோ அல்லது தனிப்பட்ட விசயமாகவோ சிலரிடம் பேச வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட Chat களை வேறு யாரும் கண்டுபிடித்திட முடியாதபடி உங்களால் மறைத்து வைக்க முடியும். கடவுச்சொல் தெரியாமல் யாராலும் குறிப்பிட்ட அந்த உரையாடலை தெரிந்துகொள்ள முடியாது. இதற்காக வாட்ஸ்ஆப்பில் Chat Lock என்றதொரு ஆப்சன் இருக்கிறது.

அதனை எப்படி பயன்படுத்துவது என்பதனை மேலே உள்ள வீடியோவில் செயல்முறை விளக்கமாக காட்டி உள்ளேன்.

Favorites People

நமது Contact இல் பல நூறு பேர் இருந்தாலும் அடிக்கடி நாம் உரையாடுவது சிலரோடு தான். அப்படி நீங்கள் அடிக்கடி உரையாட விரும்பும் நபர்களை Favorites இல் போட்டு வைத்துக்கொண்டால் அவர்கள் மேலே வருவார்கள். நீங்கள் இதனால் வேகமாக அவர்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.

Pin Chat

முக்கியமான நபர்களின் உரையாடல்களை நீங்கள் Pin செய்து வைத்துக்கொள்ளும் வசதி WhatsApp இல் உள்ளது. இதனால் குறிப்பிட்ட அந்த நபர்களின் உரையாடல் மட்டும் எப்போதும் மேலே வரும். இதனால் அவர்களிடம் இருந்து வரக்கூடிய செய்திகளை தவறாமல் உங்களால் பார்க்க முடியும். நீங்களும் உரையாட முடியும்.

Set HD Default

நீங்கள் WhatsApp இல் ஒரு Image அல்லது Video அனுப்பும் போது குறைந்த அளவு இன்டர்நெட் மற்றும் தகவல் பரிமாற்ற காரணங்களுக்காக அதனை Optimize செய்து குறைந்த அளவில் அனுப்பும். இதனால் தரக்குறைபாடு நிச்சயமாக உண்டாகும். நீங்கள் இதனை தவிர்க்க நினைத்தால், அதற்கான ஆப்சன் உள்ளது. நீங்கள் Set HD Default என்ற ஆப்ஷனை செட் செய்துவிட்டால் நீங்கள் எப்படி அனுப்புகிறீர்களோ அப்படியே அனுப்பப்படும்.

Imagine

WhatsApp இல் இந்த ஆப்சன் இருப்பது பலருக்கு தெரியாது. AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இது வேலை செய்கிறது. நீங்கள் மனதில் நினைப்பதை டைப் செய்தால் அது அனிமேஷன் வடிவில் உங்களுக்கு காண்பிக்கும். நீங்கள் சரியாக இருப்பதை பிறருக்கு பகிர முடியும். இது உங்களது உரையாடலை மேலும் சுவையாக்கும்.

Location Sharing

நீங்கள் இப்போது இருக்கும் இடத்தையோ அல்லது நீங்கள் செல்லும் இடத்தையோ WhatsApp மூலமாக பிறருக்கு பகிர முடியும். ஆனால், நீங்கள் சரியான Location ஆப்சனை தேர்வு செய்து அனுப்ப வேண்டும். அப்போது தான் சரியான இடத்திற்கு வந்து சேர முடியும்.

Stickers Using Your Own Photo

முன்பெல்லாம் Stickers ஐ உருவாக்க வேறு ஆப்களை பயன்படுத்த வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால், இப்போதெல்லாம் WhatsApp லேயே உங்களால் Stickers ஐ உருவாக்கிக்கொள்ள முடியும். உங்களுடைய எந்த புகைப்படத்தில் இருந்து வேண்டுமானாலும் உங்களால் Stickers ஐ உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதால் இது மிகவும் பயனுள்ள ஆப்சனாக இருக்கும்.

Event

நீங்கள் ஒரு நிகழ்வு ஒன்றினை நடத்துகிறீர்கள் எனில் அதற்காக ஒரு Event ஐ உருவாக்கி குறிப்பிட்ட Group இல் பகிர்ந்துகொள்ள முடியும். இதனால் யாரெல்லாம் குறிப்பிட்ட Event க்கு வருவார்கள், வரவில்லை என்பதையெல்லாம் உங்களால் தெரிந்துகொள்ள முடியும்.

Poll

உங்களது குரூப்பில் உள்ளவர்கள் பங்கேற்கும் விதத்திலான Quiz அல்லது Poll ஐ உங்களால் இந்த ஆப்சனை பயன்படுத்தி உருவாக்கிட முடியும். இதனால் மிகவும் எளிதாக பலரது கருத்துக்களை உங்களால் எளிதாக WhatsApp இல் பெற முடியும்.

Mute Chat

ஒரு தனி நபர் அல்லது குரூப் இடம் இருந்து தொடர்ச்சியாக மெசேஜ் வந்துகொண்டே இருக்கிறது, அது உங்களுக்கு தொந்தரவாக இருக்கிறது எனில் இந்த Mute ஆப்சனை பயன்படுத்தலாம். இதனால் உங்களுக்கு வரக்கூடிய தொந்தரவை தவிர்க்க முடியும். நேரம் இருக்கையில் உங்களால் அவர்களிடம் இருந்து வந்த செய்திகளை படிக்கவும் முடியும்.

இந்தப்பதிவில், பலருக்கும் பயன்படக்கூடிய 10 WhatsApp New Features குறித்து பார்த்தோம். உங்களுக்கு சந்தேகம் இருக்கும்பட்சத்தில், இணைக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து முழுமையாக தெரிந்துகொள்ளுங்கள். அதில் ஒவ்வொரு ஆப்சனையும் எப்படி பயன்படுத்த வேண்டும் என தெளிவாக விளக்கி இருக்கிறோம்.

உங்களது சந்தேகங்களை கமெண்டில் பதிவிடுங்கள்.

Exit mobile version