Site icon Tech Tamilan

யூடியூப் பற்றி உங்களுக்கு தெரியாத 10 விசயங்கள் | 10 facts about youtube in tamil

2019 இல் யூடியூப் வருமானம் $15 பில்லியன்

2019 இல் யூடியூப் வருமானம் $15 பில்லியன்

1. YouTube.com என்ற டொமைன் பிப்ரவரி 14, 2005 ஆம் ஆண்டு தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. 

 

2. இன்று கோடிக்கணக்கான வீடியோக்கள் கொட்டிக்கிடக்கும் யூடியூப் தளத்தில் முதன் முதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ Me at the Zoo எனும் வீடியோ தான். சான் டியாகோ உயிரியல் பூங்காவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை இணை நிறுவனர் ஜாவேத் கரீம் [Jawed Karim] பதிவேற்றம் செய்தார். இது ஏப்ரல் 23,2005 ஆம் நாள் நடந்தது. 

 

3. அக்டோபர் 9,2006 ஆம் நாள் யூடியூப் தளத்தை கூகுள் நிறுவனம் 1.65 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியதாக தகவல் வெளியானது. 

 

4. 2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் விளம்பரங்கள் யூடியூப் தளத்தில் வெளியாகின. 

 

5. மே, 2010 முதல் ஒரு நாளைக்கு 2 மில்லியன் முறை யூடியூப் பார்க்கப்பட்டது 

 

6. மார்ச்,2013 இல் தான் முதன் முதலாக ஒரு மாதத்திற்கு 1 பில்லியன் ஆக்டிவ் பயனாளர்களை கொண்டிருந்தது. 

 

7. தேடுபொறியில் கூகுள் சர்ச் என்ஜின் தான் முதலிடத்தில் இருக்கிறது. இரண்டாவதாக அதிகம் பேர் தகவல்களை தேடுவது யூடியூப் இல் தான். 

 

8. 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தகவலின் அடிப்படையில் ஒரு நிமிடத்திற்கு 500 மணி நேர அளவுள்ள வீடியோக்கள் யூடியூப் இல் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்த கணக்குப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் மணி அளவுள்ள வீடியோ ஒவ்வொரு நாளும் பதிவேற்றம் செய்யப்படுகிறது. 

 

9. ஒரு நாளைக்கு பதிவேற்றம் செய்யப்படும் வீடியோவை ஒருவர் பார்த்து முடிக்க 82 இரண்டு வருடங்கள் ஆகும். அதுவும் பிறந்தது முதலே ஒரு நிமிடம் கூட வீணடிக்காமல் பார்த்தால் தான் அதையும் பார்த்து முடிக்க முடியும். அப்படி பார்த்தால் எவராலும் பார்த்து முடிக்க முடியாது. 

 

10. அதேபோல ஒட்டுமொத்த பயனாளர்களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 1 பில்லியன் மணி அளவுள்ள வீடியோவை ஒரு நாளைக்கு பார்த்து முடிக்கிறார்கள். நீங்கள் ஒருவர் இவ்வளவு வீடியோவையும் பார்த்து முடிக்க 1 லட்சம் வருடங்கள் வேண்டுமாம். 

 

11. யூடியூப் தளத்தின் மூலமாக கூகுள் நிறுவனத்திற்கு கிடைக்கின்ற லாபம் ஆண்டுக்கு ஆண்டு கணிசமாக உயர்ந்துகொண்டே போகிறது. 2017 இல் $8 பில்லியன் டாலர், 2018 இல் $11 பில்லியன் டாலர், 2019 இல் $15 பில்லியன் டாலர் என வளர்ச்சி அடைந்திருக்கிறது. கூகுள் நிறுவனம் தங்களுக்கு யூடியூப் இல் விளம்பரத்தின் மூலமாக கிடைக்கின்ற 45% வருவாயை எடுத்துக்கொண்டு மீதமுள்ள தொகையை publishers மற்றும் வீடியோ வை பதிவேற்றுகிறவர்களுக்கு பங்கிட்டு கொடுக்கிறது.

 

12. இன்று கூகுள் நிறுவனத்திற்கு கீழ் தான் யூடியூப் செயல்பட்டு வருகிறது. உண்மையில் கூகுள் நிறுவனம் யூடியூப் என்ற நிறுவனத்தை உருவாக்கவில்லை. யூடியூப் என்ற ஸ்டார்ட்அப்  நிறுவனத்தை PayPal நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான Chad Hurley, Steve Chen, and Jawed Karim என்ற மூவர் தான் பிப்ரவரி,2005 இல் உருவாக்கினார்கள். கூகுள் நிறுவனமும் கூட அப்படியொரு வீடியோ பிளாட்பார்ம் ஐ உருவாக்க நினைத்தது. ஆனால் யூடியூப் க்கு கிடைத்த வரவேற்பு அதற்கு கிடைக்கவில்லை. வியாபார உலகில் ஒரு மந்திரம் இருக்கிறதே “சிறப்பான ஒன்றை உருவாக்க வேண்டும் முடியவில்லையா அதை விலைக்கு வாங்கிவிட வேண்டும்”. அதைத்தான் கூகுள் நிறுவனம் அப்போது செய்தது. நவம்பர் 2006 ஆம் ஆண்டில் $1.65 பில்லியன் க்கு யூடியூப் ஐ விலைக்கு வாங்கியது கூகுள். அப்போதைய காலகட்டத்தில் மிகப்பெரிய தொகையாக இது பார்க்கப்பட்டது. பலர் கூகுள் நிறுவனம் அதிக தொகை கொடுத்து யூடியூப் ஐ விலைக்கு வாங்கியிருக்கிறது என குறை சொன்னார்கள். ஆனால் கூகுள் இன்று பெரும் லாபத்தை அதே யூடியூப் வாயிலாக பெற்றுவருகிறது. 

 


Get updates via whatsapp






Sridaran
Baskaran

Blogger


நமது மாணவர்களும் மக்களும் அறிவியல்/தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தமிழில் படிக்க வேண்டும், அறிவினை விசாலமாக்கிக்கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். பதிவுகளை பகிர்வதன் மூலமாக உங்களது ஆதரவை தெரிவியுங்கள்.

Exit mobile version