1 வயது குழந்தைக்கு பிறந்தநாள் பரிசு என்ன கொடுக்கலாம்?

நமது உறவினர்களின் குழந்தைகளின் பிறந்தநாளுக்கோ அல்லது நண்பர்களின் குழந்தைகளின் பிறந்தநாளுக்கோ நாம் செல்லும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயமாக பிறந்தநாள் பரிசு வாங்கிக்கொண்டு தான் செல்வோம். அப்படி நாம் வாங்கிச்செல்லும் பிறந்தநாள் பரிசு என்பது தனித்துவமானதாகவும் குழந்தைக்கு பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும் என அனைவருமே நினைப்போம். ஆனால், என்ன பிறந்தநாள் பரிசு வாங்கலாம் என யோசித்தால் ஒரு முடிவுக்கே நம்மால் வர முடியாது. அப்படி நீங்களும் என்ன பிறந்தநாள் பரிசு வாங்கலாம் என யோசித்தால் இந்தப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இங்கே, 1 வயது குழந்தைக்கு பிறந்தநாள் பரிசு என்ன வழங்கலாம் என பரிந்துரை செய்துள்ளோம். [Gift Ideas For 1 Year Old Baby]

1. Baby Sitting Sofa Set Toys

குழந்தைகள் உட்கார்ந்து விளையாட பொம்மை ஷோபாவை பரிசாக கொடுக்கலாம். Baby Sitting Sofa Set Toys விலை ரூ.1000 க்கு உள்ளாகவே இருக்கும் என்பதனால் நீங்கள் பிறந்தநாள் பரிசாக இதனை வழங்க முடியும். பொதுவாக, வீட்டில் இதுபோன்ற ஒரு பொம்மையை வாங்கி இருக்க மாட்டார்கள், அதேபோல பிறரும் வாங்கி வர மாட்டார்கள். எனவே நீங்கள் தனித்துவமாக இந்த கிப்டை வாங்கி செல்லலாம். அமேசானில் ரூ. 700 முதல் ரூ. 900 க்குள் அழகான Baby Sitting Sofa Set Toys வாங்க முடியும்.

Check Price Here :

2. Baby Walker

Baby Walker குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பிறந்தநாள் பரிசாக நிச்சயம் இருக்கும். ஆனால், குழந்தைகள் இருக்கும் வீட்டில் அவர்களும் இது போன்ற பொருளை வாங்கி வைத்திருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆகவே, நீங்கள் வாங்குவதற்கு முன்பாக இதுபோன்றதொரு Baby Walker அவர்களது வீட்டில் இருக்கிறதா என கேட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் இதையே வாங்க வேண்டும் என விரும்பினால் கூடுதல் விலையில் அதிக அம்சங்கள் அடங்கிய Baby Walker ஐ வாங்கி பரிசளிக்கலாம்.

Check Price Here :

3. Shape sorting toys

1 வயது குழந்தைக்கு வெறும் விளையாட்டுப் பொருள்களை மட்டுமே தான் பிறந்தநாள் பரிசாக வழங்க வேண்டும் என்பதில்லை. குழந்தைகள் அவர்களது இளம் பருவத்தில் எவ்வளவு அதிகமாக வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும். ஆகவே அவர்களது நியாபக சக்தி மற்றும் சிந்திக்கும் திறன் ஆகியவற்றை மேம்படுத்தும் விதத்திலான பிறந்தநாள் பரிசை அவர்களுக்கு வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்தவகையில், Shape sorting toys என்பது அருமையான பிறந்தநாள் பரிசாக இருக்கும். நீங்கள் ரூ.500 க்கு உள்ளாகவே அருமையான Shape sorting toys ஐ வாங்க முடியும்.

Check Price Here :

4. Einstein Box

Einstein Box என்பது பல விதமான கிப்டுகள் அடங்கிய ஒரு பரிசுப்பொருள். அதற்கு உள்ளாக, குழந்தைகளின் மொழித்திறன், சிந்திக்கும் திறன், நல்ல பழக்கவழக்கங்களை உருவாக்கும் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்ட பொருள்கள் இதற்கு உள்ளாக இருக்கும். Einstein Box ஒவ்வொரு குறிப்பிட்ட வயதினருக்கும் தனித்தனியே இருக்கிறது. நீங்கள் 1 வயது குழந்தைக்கு Einstein Box வாங்க வேண்டுமெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கலாம். ரூ.700 க்கு இந்த Einstein Box கிப்டை நீங்கள் வாங்கலாம்.

Check Price Here :

5. Ball Pool

ஒரு சிறிய டென்டிற்குள் சிறிய சிறிய பந்துகள் போட்டு அதிலே குழந்தைகள் விளையாடும் விதத்தில் உள்ள கிப்ட் தான் இது. நீங்கள் இந்த பரிசை எந்த குழந்தைகளின் பிறந்தநாளுக்கு வழங்கினாலும் கூட அது நிச்சயமாக குழந்தைகளுக்கு பிடிக்கவே செய்யும். குழந்தைகள் பந்துகளை வைத்து விளையாடும் போது மகிழ்ச்சியாக உணர்வார்கள். ரூ.500 துவங்கி ரூ 1000 வரைக்கும் இந்த கிப்டை வாங்க முடியும். உங்களுக்கு எந்த விலையில் வாங்க வேண்டுமோ அதை நீங்கள் தேர்வு செய்து வாங்கலாம்.

Check Price Here :

6. Baby Horse Rider

குழந்தைகள் அமர்ந்து விளையாடுவதற்கும் குழந்தைகளை அமர வைத்து பெற்றோர்கள் நடந்து செல்வதற்கும் Baby Horse Rider ஐ பிறந்தநாள் பரிசாக வழங்கலாம். பெரும்பாலும் இந்தப்பொருளை யாரும் வாங்கி வைத்திருக்க மாட்டார்கள். ஆகவே, நீங்கள் இதனை நீங்கள் பரிசாக வழங்கினால் உபயோகமானதாக இருக்கும். ரூ. 1500 க்கும் அதிகமாக நீங்கள் இந்தப்பரிசை வாங்கினால் நல்ல குவாலிட்டியுள்ள Baby Horse Rider ஐ வாங்கலாம்.

Check Price Here :

7. Baby Panda Magic Car

நீங்கள் இந்தப்பரிசை வழங்கினால் 1 வயது முதல் 8 வயது வரைக்கும் கூட இந்தப்பரிசை பயன்படுத்த முடியும். 70 கிலோ எடை கொண்டவர் கூட இதிலே ஏறி அமரும் விதத்தில் மிகவும் தரமாக வடிமைக்கப்பட்டுள்ளது. ஆகவே, பல ஆண்டுகளுக்கு குழந்தைகளால் இதை பயன்படுத்த முடியும். பல நிறுவனங்கள் Baby Panda Magic Car ஐ தயாரித்து வழங்குகின்றன. ஆகவே, விலை மற்றும் தரத்தை ஒப்பிட்டு உங்களுக்கு பொருத்தமான ஒன்றினை வாங்கி பிறந்தநாள் பரிசு வழங்கலாம்.

Check Price Here :

8. Wooden Rainbow Tower

குழந்தைகளின் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தும் விதத்திலான ஒரு பரிசாகவும் இருக்க வேண்டும், ரூ500 க்கு உள்ளாகவும் இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் நிச்சயமாக இந்த Wooden Rainbow Tower பொருத்தமான ஒன்றாக இருக்கும். ரூ. 500 க்கும் கீழாகவே நீங்கள் இந்தப்பரிசை வாங்க முடியும். நீங்கள் இதை ஆன்லைன் மூலமாகவோ அல்லது நேரடியாக கடைக்குச் சென்றோ கூட வாங்கலாம்.

Check Price Here :

9. Pool for Kids

பெரும்பான்மையான வீடுகளில் குழந்தைகளை குளிப்பாட்ட இந்த மாதிரியான ஒன்றை பயன்படுத்த மாட்டார்கள். நீங்கள் இதை பிறந்தநாள் பரிசாக வழங்கினால் நிச்சயமாக குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கு பயன்படுத்துவார்கள். மேலும், குழந்தைகளும் ஜாலியாக குளிக்க உங்கள் கிப்ட் உதவும். பயன்படும் விதத்திலான பரிசை நீங்கள் கொடுக்க வேண்டும் என நினைத்தால் இதை வழங்கலாம்.

Check Price Here :

இவை தவிர நீங்கள் வேறு ஏதேனும் ஒரு நல்ல பரிசை வழங்கி இருந்தால் அதனை கமெண்டில் பதிவிடுங்கள். கிப்ட் குறித்து தேடுவோருக்கு அது பயனுள்ளதாக இருக்கும்.

TECH TAMILAN